சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergetomergefrom|சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்}}
{{சேரர்கள் வரலாறு}}
[[படிமம்:Chera emblem.jpg|thumbnail|வலது|சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனப்படும் எய்யும் வில்]]
'''உதியஞ்சேரலாதன்''' கி.பி. முதல் நூற்றாண்டில் [[குட்டநாடு|குட்டநாட்டை]]ஆண்ட [[சேரர்|சேர]] அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்|இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும்]] [[பல்யானைச் எல்கெழு குட்டுவன்|பல்யானைச் எல்கெழு குட்டுவனும்]] ஆவர்<ref>சு. இரத்தினசாமி, ''சங்க கால அரசரக்ள் (கால வரைசைப்படி)'', மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108, பதிப்பாண்டு 1995.</ref>. [[சங்ககாலம்|சங்ககாலப்]] புலவர் [[மாமூலர்]] [[அகநானூறு|அகநானூற்றில்]] (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் [[கரிகாலன்|கரிகாலனுடன்]] [[வெண்ணிப்பறந்தலை]] என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி [[வடக்கிருத்தல்|வடக்கிருந்து]] உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர், [[வெண்னிகுயத்தியார்]], [[கழாத்தலையார்]] ஆகியோர் கூறுகின்றனர்.
'''சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்''' [[சேரர் குடிப்பெயர்கள்|சங்க காலச் சேர மன்னன்.]]
 
==மேற்கோள்கள்==
[[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]], [[பல்யானைச் செல்கெழு குட்டுவன்]] ஆகியோரின் தந்தை. <ref>பதிற்றுப்பத்து, பதிகம் 2, 3</ref>
<References />
 
ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் [[முரஞ்சியூர் முடிநாகராயர்]] குறிப்பிடுகிறார்.<ref>
<poem>அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - புறநானூறு 2</poem></ref>
 
மேலும் [[பொதியம்|பொதிய மலையும்]], [[இமய மலை]]யும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
 
இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும்பினும் மேலான சூழ்ச்சித் திறனும், காற்றினும் மேலான வலிமையும், தீயைக் காட்டிலும் மேலான அழிக்கும் ஆற்றலும், நீரைக் காட்டிலும் மேலான கொடைத்தன்மையும் இருந்தன எனவும் குறிப்பிடுகிறார்.
 
ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது.<ref>சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை</ref>
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்ககால அரசர்கள்]]
[[பகுப்பு:சேர அரசர்கள்]]
[[பகுப்பு:சங்ககாலச் சேரர்]]