ஐக்கிய நாடுகள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
===பொதுச் செயலாளர்===
[[File:Ban Ki-moon 1-2.jpg|thumb|upright|200px|தற்போதைய ஐநா பொதுச் செயலாளர் [[பான் கீ-மூன்]]]]
ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும் பான் கீ-மூன் 2007 ஆம் ஆண்டில் அப்போதைய பொத்ஜுச் செயலாளரான கோபி அன்னானிடம் இருந்து பதவியைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்ட இவர் 2016 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.<ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-us-canada-13868655|title=Ban Ki-moon wins second term as UN Secretary General|publisher=BBC | date=21 June 2011}}</ref>
 
"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்"<ref>[[s:en:Charter of the United Nations#Article 97|Charter of the United Nations, Article 97]].</ref> என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம்<ref>[[s:en:Charter of the United Nations#Article 97|Charter of the United Nations, Article 99]].</ref> உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.<ref name=sgrole>[http://www.un.org/sg/sgrole.shtml Office of the Secretary-General–United Nations].</ref>
 
பொதுச் செயலாளர், ஐநா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையுடன், பொதுச் சபையினால் தெரிவு செய்யப்படுகிறார். இவ்விடயத்தில் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகள் தமது தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.<ref>[http://www.un.org/sg/appointment.shtml United Nations–Appointment Process of the Secretary-General].</ref> கோட்பாட்டளவில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். ஆனாலும், இந்நிலை இதுவரை ஏற்பட்டதில்லை.<ref name="una-usa-fact">{{cite web | url=http://www.unausa.org/atf/cf/%7B49C555AC-20C8-4B43-8483-A2D4C1808E4E%7D/SG%20Reform%20Fact%20Sheet-fina-logol.pdf |title=An Historical Overview on the Selection of United Nations Secretaries-General | publisher=UNA-USA | accessdate=30 September 2007|format=PDF |archiveurl = http://web.archive.org/web/20071025014319/http://www.unausa.org/atf/cf/%7b49C555AC-20C8-4B43-8483-A2D4C1808E4E%7d/SG+Reform+Fact+Sheet-fina-logol.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = 25 October 2007}}</ref> இப்பதவிக்கான வரன்முறைகள் எதுவும் கிடையா. எனினும். இப்பதவியை ஐந்தாண்டுகள் கொண்ட ஒன்று அல்லது இரண்டு பதவிக்காலங்களுக்கு ஒருவர் வகிக்கலாம் என்பதும், புவியியற் பகுதி அடிப்படையிலான சுழற்சி முறையில் இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதும், இப்பதவியில் இருப்பவர் நிரந்தர உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது