நுவரெலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சுற்றுலாத்துறை: *விரிவாக்கம்* (edited with ProveIt)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎சுற்றுலாத்துறை: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 36:
==சுற்றுலாத்துறை==
பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் [[பிரித்தானியர்]] காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது. குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் இது பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்றுகளாகக் [[இலங்கையில் குடியேற்றவாதக் கட்டிடக்கலை|குடியேற்றவாதக் கட்டிடக்கலைப்]] பாணியிலமைந்த [[கட்டிடம்|கட்டிடங்கள்]] மற்றும் பல அம்சங்களை இன்றும் அங்கே காணமுடியும். ஆங்கிலேயர்களால் இந்தப் பிரதேசம் ''குட்டி இங்கிலாந்து'' என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
===கவனமீர்க்கும் சில இடங்கள்===
[[Image:Hanuman20a.jpg|thumb|150px|நுவரெலியா அண்மையில் உள்ள ஓர் [[அனுமன்|அனுமன்]] கோவில்]]
இங்குள்ள [[குழிப்பந்தாட்டம்|குழிப்பந்தாட்ட]] மைதானத்தின் முனையொன்றில் பிரித்தானிய ஆளுநர் ஒருவரின் கல்லறை தூண் உள்ளது. இவர் யானை வேட்டையில் ஆர்வமிக்கவர் என்றும் நூற்றுக்கணக்கான யானைகளை கொன்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவராற்றிய துர்செயலுக்காக ஒவ்வொரு ஆண்டும் இத்தூணை மின்னல் தாக்குவதாகவும் உள்நாட்டு கதையொன்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த இடத்திற்குச் செல்ல அணுக்கம் இல்லை.
 
இங்குள்ள ஹோலி டிரினிட்டி தேவாலயத்தில் உள்ள பழைய கல்லறைத் தோட்டத்தில் உள்ள கல்லறைத் தூண்களில் பல ஆங்கிலேயர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
 
[[இந்து சமயம்|இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலின்]] வரலாற்றின்படி இங்குள்ள ''சீதாகோவில்'' (அனுமன் கோவில்) உள்ள இடத்தில்தான் [[இராமாயணம்|இராமாயணக்]] காவியத்தின் நாயகி [[சீதை]] [[இராவணன்|இராவணனால்]] சிறை வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் கதைகள் உள்ளன. இந்தக் கோவில் உள்ள இடம் ''சீதா எலியா'' என அழைக்கப்படுகிறது. இது நுவரெலியாவிலிருந்து [[பதுளை]] செல்லும் வழியில் [[ஹக்கலா தாவரப் பூங்கா]]வை எட்டுவதற்கு முன்னர் அமைந்துள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள இடங்கள் இராமாயணத்தின் பல வரலாற்று நிகழிடங்களாக இலங்கை சுற்றுலாத்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு, ''இராமாயண வழித்தடம்'' என்ற சுற்றுலாப் பொதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.<ref name="தி இந்து">{{cite web | url=http://www.thehindu.com/news/international/south-asia/sita-temple-construction-to-begin-soon-in-sri-lanka/article4513902.ece | title=sita temple construction to begin in Sri Lanka | publisher=[[தி இந்து]] | work=மார்ச்சு 16, 2013 | accessdate=மார்ச்சு 16, 2013 | author=A. Srivathsan}}</ref> சீதை தழலில் இறங்கியதாகக் கூறப்படும் ''திவுரும்போலா'' இடத்தில் ஓர் கோவில் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.<ref name="தி இந்து" /> இந்தத் திட்டங்களை [[இலங்கையின் அரச ஆசியர்ச் சமூகம்]] எதிர்த்துள்ளது.<ref name="தி இந்து" />
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1380980" இலிருந்து மீள்விக்கப்பட்டது