குழந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கி இடையிணைப்பு
சி மேற்கோள்கள் (edited with ProveIt)
வரிசை 1:
'''குழந்தை பிரான்சிசு''' (Kulandei Francis, பிறப்பு:1947) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஓர் தன்னார்வலத் தொண்டு நிறுவனர். ''ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம்'' (Integrated Village Development Project) என்ற அரசுசாரா தன்னார்வல அமைப்பை நிறுவி [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் உள்ள வறியவர்களுக்கு தமது சொந்தக் கால்களில் நிற்கத் துணை நின்றவர். 2012க்கான [[மக்சேசே பரிசு|ரமன் மக்சேசே]] பரிசு பெற்றவர்களில் ஒருவராவார்<ref name="குழந்தை பிரான்சிசுக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது.">{{cite web | url=http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationKulandeiFran.htm | title=குழந்தை பிரான்சிசுக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது. | accessdate=மார்ச்சு 20, 2013}}</ref>.
 
[[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] காரிப்பட்டி சிற்றூரில் ஓர் வறிய குடும்பத்தில் தந்தை குழந்தை மற்றும் தாய் மாதளை மேரிக்கு மகனாகப் பிறந்தார். தங்கள் மகன் நன்கு கற்றுத்தேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரான்சிசின் பெற்றோர் தங்களிடமிருந்த ஒரே நிலத்துண்டையும் விற்று அவரை [[அண்ணாமலை பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்]] பட்டப்படிப்பு படிக்க உதவினர். ஓர் கிறித்தவப் பாதிரியாக விரும்பிய பிரான்சிஸ் 1970இல் ''பாதர்ஸ் ஆப் ஹோலி கிராசில்'' இணைந்தார். அவர்களால் [[மகாராட்டிரம்|மகாராட்டிராவிலுள்ள]] [[புனே]]யில் [[இறையியல்]] படிக்க அனுப்பப் பட்டார்.அந்தப் படிப்பின் தொடர்பாக வங்காளதேச போரில் துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டார். 1972ஆம் ஆண்டு புனேயில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு துயர் துடைப்புப் பணிகளிலும் பங்கேற்றார்.
 
வறியவர்களின் வாழ்நிலையை ஏற்றிட விருப்பமுற்ற பிரான்சிஸ் [[கனடா]]விலுள்ள கோடி பன்னாட்டு கழகத்தில் சமூக மேம்படுத்தல் கல்வியையும் [[பிலிப்பைன்சு]] நாட்டில் ஊரக மேலாண்மை கல்வியையும் கற்றார்.
வரிசை 12:
[[பகுப்பு:சமூக சேவகர்கள்]]
[[பகுப்பு:மக்சேசே பரிசு பெற்றோர்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[en:Kulandei Francis]]
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது