"அசை (யாப்பிலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,439 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மொழியில் எழுத்தின் ஒலி-அளவை [[மாத்திரை]] எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை '''அசை''' எனக் கூறுகிறது. யாப்பிலக்கணம்|யாப்பிலக்கணத்தில்]] '''அசை''' என்பது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்துக்களின்]] குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்கள்]] உருவாகின்றன.
 
[[தொல்காப்பியம்]] நேர். நிரை. நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய [[யாப்பருங்கலம்|யாபருங்கலமும்]], அதன் தொகுப்பாக அமைந்த [[யாப்பருங்கலக் காரிகை]]யும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.
 
==அசை அமைப்பு==
 
{|border="1"
!முதல் எழுத்து!!இரண்டாம் எழுத்து!!மூன்றாம் எழுத்து!!எடுத்துக்காட்டு!!சீர்நிலை
|-
|குறில்|| - || - ||அ, க || நேர்
|-
|நெடில்|| - || - ||ஆ, பூ || நேர்
|-
|குறில்||ஒற்று || - ||அன், விண் || நேர்
|-
|நெடில்||ஒற்று|| - ||ஆள், தீர் || நேர்
|-
|குறில்|| குறில் || - ||அடி, மன || நிரை
|-
|குறில்||நெடில்|| - ||அடா, புகா || நிரை
|-
|குறில்||குறில் ||ஒற்று||அடர், திகில் || நிரை
|-
|குறில்||நெடில்||ஒற்று ||அதால், தொழார் || நிரை
|}
 
மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் ''நேரசை'' என்றும் ஏனையவை ''நிரையசை'' என்றும் குறிப்பிடப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1384546" இருந்து மீள்விக்கப்பட்டது