சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Samanar Malai Caves, Madurai.jpg|thumb|[[மதுரை]] அருகே உள்ள சமணர் மலை ]]
'''சமணர் மலை''' [[மதுரை|மதுரைக்கு]] அருகே [[தேனி]] செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு [[கல்குன்று]] ஆகும். இது [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுவாக்கில் இங்குள்ள [[குகை|குகைகளில்]] [[சமண முனிவர்கள்]] வாழ்ந்ததாக இங்குள்ள [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]] கூறுகின்றன. இங்கு கல்வெட்டுக்களுடன் [[சமண படுகை|சமண படுகைகளும்]] காணப்படுகின்றன. இந்த மலையில் பேச்சிப்பள்ளம், மாதேவிப்பெரும்பள்ளி, செட்டிபொடவு என மூன்று வரலாற்று சின்னங்கள் உள்ளன.
 
== பேச்சிப்பள்ளம் ==
 
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.இதன் அருகில் உள்ள பாறையின் நெற்றியில் ஒன்பது சமண உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இந்த சிற்பங்களில் மகாவீரர், பாசுவநாதர் மற்றும் கோமடீஸ்வரர் ஆகியோரின் சிற்பங்கள் உருவ வடிவில்செதுக்கப்பட்டுள்ளன.
 
== செட்டிபொடவு குகை ==
 
==செட்டிபோடவு குகை==
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் மேற்புறத்தில் செதுக்கப்பட்டுள்ள அழகிய மூக்குடை அண்ணலின் (மகாவீரர்) உருவம் ஒரு செட்டியாரை போல் தோற்றமளிக்கிற காரனாத்தால் செட்டிபொடவு குகை என அழைக்கப்படுகிறது.மேலும் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகளும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தை செய்தவர் குணசேனபடாரர், கனகநந்திப்படாரர் ஆகியோரின் மாணாக்கர்களே என்பதை கல்வெட்டுகளில் மூலம் அறியப்படுகிறது. குகையின் மேற்கூரை வட்டமாகக் குடையப்பட்டுள்ளது.அதன் தென் சுவரில் 5 சமண கல் திரு மேனிகள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மலையில் சமணர்களால் ஓர்உறைவிடப்பள்ளி நடத்தப்பட்டு வந்ததாகவும்இதில் பல்வேறு ஊர்களிலிருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் வந்து பயின்றதாகவும் இங்கு உள்ள கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.<ref> http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/making-history/article2772835.ece,,</ref>
 
== மாதேவிப்பெரும்பள்ளி ==
 
இந்த மலையின் சரிவில் சிதைந்த நிலையில் காணப்படும் அடிதளக்கல்லில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இங்கு '''மாதேவிப்பெரும்பள்ளி''' என்ற ஒரு சமணப்பள்ளி இருந்ததாக இந்த கல்வெட்டு கூறுகிறது. மேலும் இந்த கல்வெட்டு கீழக்குயில்குடி கிராமத்திற்க்கு '''உயிர்குடியான அமிர்த பராக்கிரம நல்லூர்''' என்ற ஒரு பெயரும் வழக்கில் இருந்துள்ளது என கூறுகிறது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_மலை,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது