"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6,918 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (படிமம் சேர்க்கை)
சி (இற்றைப்படுத்தல்)
 
===புனித யோசேப்பு பெருவிழாவின் பொருள்===
மார்ச்சு 19ஆம் நாள் திருச்சபை புனித யோசேப்பின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. அந்த நாளில் தமது பணியேற்பு விழா நடைபெறுவது பொருத்தமே என்று திருத்தந்தை தாம் ஆற்றிய மறையுரையில் சுட்டிக்காட்டினார்.<ref>[http://www.catholicherald.co.uk/news/2013/03/19/full-text-of-pope-franciss-inauguration-homily/ திருத்தந்தை பிரான்சிசின்பிரான்சிசு ஆற்றிய மறையுரை (ஆங்கிலம்)]</ref> மேலும் புனித யோசேப்பைப் போன்று உலக மக்கள் அனைவரும், குறிப்பாக நாடுகளின் ஆட்சியாளர்கள், மக்களைப் "பாதுகாக்க" வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
 
==திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் சந்தித்தல்==
2013, மார்ச்சு 23ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு திருத்தந்தையர்களின் கோடையில்லத்தில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்ற முன்னாள் திருத்தந்தை பெனடிக்டைச் சென்று சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
 
வத்திக்கான் நேரம் 12:05 அளவில் திருத்தந்தை இத்தாலிய உலங்கு வானூர்தியில் ஏறிச்சென்று, 10 நிமிட பயணத்திற்குப் பின் திருத்தந்தையர் கோடையில்லமாகிய காஸ்டல் கண்டோல்ஃபோ வானூர்தித் தளத்தில் இறங்கினார். அங்கு அவரை வரவேற்பதற்காக, ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்ட் நின்றுகொண்டிருந்தார். பிரான்சிசும் பெனடிக்டும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.
 
பின்னர் சிற்றுந்தில் ஏறி இருவரும் கோடையில்லம் சென்றனர். அங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தில் இறைவேண்டல் செய்ய இருவரும் நுழைந்தனர். திருத்தந்தைக்கென மைய பீடத்தின் நடுவில் இடப்பட்டிருந்த தனிப்பட்ட சிறப்பு வேண்டல் முழந்தாட்பீடத்தில் மன்றாட்டு நிகழ்த்துப்படி பெனடிக்டு திருத்தந்தை பிரான்சிசைக் கேட்டார். ஆனால் பிரான்சிசு வேகமாக நடந்து சென்று, பொதுமக்களுக்கென்று இடப்பட்ட சாதாரண முழந்தாட்பீடத்தில் பெனடிக்டின் அருகே தாமும் முழந்தாட்படியிட்டு வேண்டச் சென்றார். அப்போது பெனடிக்டைப் பார்த்து, "நாம் இருவரும் சகோதரர்கள்" என்று கூறினார். இவ்வாறு, பிரான்சிசு செய்தது அர்த்தம் நிறைந்த செயலாகக் கருதப்படுகிறது.
 
12:30 அளவில் திருத்தந்தை பிரான்சிசும் ஒய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் நூலக வரவேற்பு அறையில் சந்தித்து 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எப்பொருள் பற்றி விவாதித்தார்கள் என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
 
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உணவறைக்குச் சென்று அங்கு இருவரும் நண்பகல் உணவு அருந்தினர். பின்னர் திருத்தந்தை பிரான்சிசு உலங்கு வானூர்தி ஏறி மீண்டும் வத்திக்கான் சென்றடைந்தார்.
 
பதவியில் இருக்கும் திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் இவ்வாறு சந்தித்தது வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்ச்சி. பல நூற்றாண்டுகளாகவே, திருத்தந்தையின் இறப்புக்குப் பின்னர்தான் புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தைப் பின்பற்றாமல் திருத்தந்தை 16ஆம் பெனடிக்டு 2013, பெப்ருவரி 28ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற திருத்தந்தை புதிதாகப் பதவியேற்ற திருத்தந்தையின் ஆட்சியில் தலையிடுவாரா? அவருக்கு எதிரான அதிகார மையமாக அமைந்துவிடுவாரா? - இத்தகைய கேள்விகள் எழுகின்ற பின்னணியில் இரு திருத்தந்தையரும் சந்தித்தது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.bbc.co.uk/news/world-europe-21908576 திருத்தந்தை பிரான்சிசும் ஓய்வுபெற்ற திருத்தந்தை பெனடிக்டும் சந்திக்கின்றனர்.]</ref><ref>[http://abcnews.go.com/International/wireStory/popes-meet-lunch-1st-time-600-years-18796239 "நாம் இருவரும் சகோதரர்கள்"]</ref><ref>[http://www.nytimes.com/2013/03/24/world/europe/pope-francis-and-benedict-share-a-lunch.html?pagewanted=all&_r=0 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு]</ref>
 
==திருத்தந்தை பிரான்சிசின் நூல் படைப்புகள் (எசுப்பானிய மொழியில்)==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1388581" இருந்து மீள்விக்கப்பட்டது