ஆவியூர், விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆவியூர்''' (ஆங்கிலம்:Aviyur), ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:54, 24 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஆவியூர் (ஆங்கிலம்:Aviyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவில், காரியாபட்டி செல்லும் வழியில் ஆவியூர் அமைந்துள்ளது.இந்த ஊரில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு கிடைத்த சான்றுகளின் படி இந்த ஊர் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என தொல்பொருள் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆவியுருக்கு அருகில் குரண்டி என்ற பெயருடைய ஊரில் சமணர் குகை உள்ளது.

புவியியல் அமைப்பு

இவ்வூரின் அமைவிடம் 9° 44' N , 78° 6' E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 123 மீட்டர் (412 அடி) உயரத்தில் இருக்கின்றது.

சிவன் கோவில்

சோழ அரசன் ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் (கி.பி 985 - 1014) இந்த சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிவன் கோவில் ராஜேந்திர சோலீச்வரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கர்ப்பகிரஹமும், அர்த்தமண்டபமும் காணப்படுகிறது. இந்த கோவிலின் விமானம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.பின்னர் அரசாண்ட பாண்டிய மன்னர்கள் கோவிலுக்கு சுற்று சுவர் எடுத்து , சிவலிங்கத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

கல்வெட்டுக்கள்

இந்த கோவிலின் வடக்கு சுற்று சுவரில் பிற்கால பாண்டிய மன்னர்களை பற்றிய கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. அவற்றில் 1246 ஆம் ஆண்டு முதலாம் ஜடாவர்ம விக்கிரம பாண்டிய மன்னனை பற்றியும், 1250 ஆம் ஆண்டு இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியனை பற்றிய குறிப்பும் காணப்படுகிறது இந்த கல்வெட்டுக்களில் இந்த ஊர் வயலூர் நாடு என குறிப்பிடுகிறது. இந்த சிவன் கோவில் ராஜேந்திர சோலீச்வரம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊர் மக்கள் சிறு வணிகர்களிடம் வரி வசூல் செய்து இந்த கோவிலை மேம்படுத்தி உள்ளனர். இன்னொரு கல்வெட்டின் பொதியன் செய்துங்க நாடாள்வான் என்பவரால் நிறுவப்பட்ட காமகோடா நாச்சியார் என்ற உமா தேவி சிலை உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய நிலம் அழகு அருளால பெருமான் என்ற சோழ கங்கா தேவன் என்பவரால் 2 காணி நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது என இந்த கல்வெட்டு கூறும் செய்தி ஆகும்.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவியூர்,_விருதுநகர்&oldid=1388998" இலிருந்து மீள்விக்கப்பட்டது