கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: lez:ЧӀулав хъалхъам (strong connection between (2) ta:கருங்குழி and lez:ЧӀулав тӀеквен)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Black Hole Milkyway.jpg|thumb|right|250px|பால் வீதியில் கருங்குழியின் உருப்போலியான தோற்றம். இக்குழி பத்து சூரிய தினிவுகளை கொண்டது. 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நோக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.spacetimetravel.org/expeditionsl/expeditionsl.html |last=Kraus |first=Ute |date=2005-03-20 |title=Step by Step into a Black Hole}}</ref>]]
'''கருங்குழி'''கள் (''Black Hole'') அல்லது '''கருந்துளை''' என்பன, இவற்றின் எல்லைக்குட் செல்லும், [[ஒளி]] உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான [[புவியீர்ப்பு|ஈர்ப்புச்]] சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை [[நிகழ்வெல்லை]] (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற [[மின்காந்த அலை]]கள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய [[நட்சத்திரம்|நட்சத்திர]]ங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் [[கனஅளவு|கன அளவோ]], [[மேற்பரப்பு|மேற்பரப்போ]] கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான [[திணிவு]] (''mass'') காரணமாக இது [[முடிவிலி]]யான அடர்த்தியைக் கொண்டுள்ளது.
 
[[File:BH LMC.png|thumb|upright=1.35|right|பெரிய மகலனிக் விண்மீன் கூட்டத்துக்கு முன்னேயுள்ள கருங்குழியின் தோற்றம். [[ஈர்ப்பு வில்லை]] விளைவு காரணமாக மகலனிக் கூட்டத்தின் வடிவம் உருப்பெருத்து இரண்டாகத் தெரிகின்றது. மேலே குறுக்காக இந்த விளைவு காரணமாக பால்வெளி மண்டலம் வளைந்து தோற்றமளிக்கின்றது.]]
 
இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி [[விண்மீன்]]கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து [[வளிமம்|வளிமங்களைக்]] கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது [[வெப்பநிலை]] அதிகரிப்பதனால் பெருமளவு [[கதிர்வீச்சு]] வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது [[விண்வெளித் தொலைநோக்கி]]கள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது