இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 54:
footnotes =
}}
'''இந்தோனேசியா''' (''Indonesia''), அதிகாரப்பூர்வமாக '''இந்தோனேசியக் குடியரசு''' (''Republic of Indonesia'') என அழைக்கப்படுவது 17,508 [[தீவு தேசம்|தீவுகளாலான]] [[தென்கிழக்காசியா|தென் கிழக்காசிய]], மற்றும் [[ஓசியானியா|ஓசியானிய]] நாடாகும்.<ref>[http://ec.europa.eu/europeaid/where/asia/regional-cooperation/support-regional-integration/asem/documents/10.03.10_info_on_indonesia_finale_en.pdf Information on Indonesia]. ASEM Development conference II: Towards an Asia-Europe partnership for sustainable development. 26–27 May 2010, Yogyakarta, Indonesia. ec.europa.eu</ref> 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. [[சக்கார்த்தா]] இந்த நாட்டின் தலைநகரம். [[பப்புவா நியூ கினி]], [[கிழக்குத் திமோர்]], [[மலேசியா]] என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. [[சிங்கப்பூர்]], [[பிலிப்பைன்சு]], [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலியா]] என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார்]] தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய [[முஸ்லிம்]] மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, [[ஜி-20|குழு-20 முக்கிய பொருளாதாரங்கள்]] அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், [[பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அடிப்படையில் உலகின் ஆறாவதுபதினாறாவது இடத்திலும், [[கொள்வனவு ஆற்றல் சமநிலை|வாங்கும் திறன் சமநிலை]] அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தோனேசிய தீவுகள், சிறப்பாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மாசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் [[இந்து மதம்|இந்து]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் [[இஸ்லாம்|இஸ்லாமிய]] ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலூக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப் பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கீழ் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது சிறிது காலம் [[யப்பான்|யப்பானிய]] ஆக்கிரமிப்பில் இருந்த நாடு [[1945]] இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. [[ஐக்கிய நாடுகள் சபை]] [[1953]] இல் அங்கீகரித்தது.
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது