இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிம சேர்க்கை
சி *நீக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 37:
|isbn=0-470-61841-8}}</ref><ref>Note: The term 'universe' is defined as everything that physically exists: the entirety of space and time, all forms of matter, energy and momentum, and the physical laws and constants that govern them. However, the term 'universe' may also be used in slightly different contextual senses, denoting concepts such as the cosmos or the philosophical world.</ref>
 
மிகப்பழமையான கல்வித் துறைகளுள் ஒன்று இயற்பியல் ஆகும்; [[வானியல்|வானியலையும்]] உள்ளடக்குவதால் மிகப் பழமையானதென்றே கூறலாம்.<ref> கிமு 3000க்கும் முந்தைய துவக்க கால நாகரிகங்களாக அறியப்படும் [[சுமேரியா|சுமேரியர்கள்]], தொன்மை எகிப்தியர்கள் மற்றும் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளியினர்]] அனைவருமே சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்களைக் குறித்த அடிப்படை அறிவையும் கணிக்கக்கூடியத் திறனையும கொண்டவர்களாக இருந்தனர்.</ref> கடந்த இரு ஆயிரவாண்டுகளாக [[வேதியியல்]], [[கணிதம்|கணிதத்தின்]] சில கூறுகள், மற்றும் [[உயிரியல்|உயிரியலுடன்]] [[இயல் மெய்யியல்|இயல் மெய்யியலின்]] பகுதியாக இயற்பியலும் உள்ளது. இருப்பினும் 17ஆம் நூற்றாண்டு [[அறிவியல் புரட்சி|அறிவியல் புரட்சிக்குப்]] பின்னர் [[இயற்கை அறிவியல்]] தனித்தன்மையுடன் தங்களுக்கே உரித்தான ஆய்வுநெறிகளுடன் வளர்ந்துள்ளது.<ref>[[பிரான்சிஸ் பேக்கன்|பிரான்சிஸ் பேக்கனின்]] 1620 ''Novum Organum'' அறிவியல் நெறிமுறைகளைக் குறித்து விமர்சித்துள்ளது.</ref>

இயற்பியல் தேற்றக் கொள்கைகளை உடைய அறிவியல் மட்டுமன்று; ஓர் சோதனைமுறை அறிவியலும் ஆகும். இயற்பியல் அறிமுறை கொள்கைகளை, பிற அறிவியல் கொள்கைகளைப் போன்றே, சோதனைகள் மூலம் சரிபார்க்க இயலும்; அதேபோன்று அறிமுறைக் கொள்கைகளும் பின்னாளில் நடத்தப்படக்கூடிய சோதனைகளின் விளைவுகளை முன்னதாக கணிக்க கூடியன. இயற்பியல் [[உயிரி இயற்பியல்]], [[குவைய வேதியியல்]] என பல்வேறு துறையிடை ஆய்வுப்பகுதிகளிலும் பங்கேற்பதால் இயற்பியலின் எல்லைகள் இவையென வரையறுப்பது இயலாததாக உள்ளது. இயற்பியலின் பல புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலான நேரங்களில் மற்ற அறிவியல் துறைகளில் அடிப்படை இயக்குவிசைகளை விளக்குவதாகவும் புதிய ஆய்வுப் பகுதிகளைத் திறப்பதாகவும் உள்ளது.
 
இயற்பியல் அறிமுறைக் கொள்கை முன்னேற்றங்கள் புதிய [[தொழினுட்பம்|தொழினுட்பங்கள்]] உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. காட்டாக, [[மின்காந்தவியல்]] அல்லது [[அணுக்கருவியல்]] குறித்த கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றம் ஏற்படுத்திய [[தொலைக்காட்சி]], [[கணினி]]கள், [[வீட்டுக் கருவி]]கள், மற்றும் [[அணு குண்டு]]கள் போன்ற கருவிகள் உருவாக்கத்திற்கு காரணமாயின; [[வெப்ப இயக்கவியல்]] ஆய்வுகளால் [[தொழில்மயமாதல்|தொழில்மயமானது]]; [[விசையியல்]] முன்னேற்றங்கள் [[நுண்கணிதம்|நுண்கணித]] வளர்ச்சிக்கு வித்தானது.
 
இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை [[டெமோக்கிரட்டிசு]], [[எரோசுதெனீசு]], [[அரிசுட்டாட்டில்]] போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி [[கலீலியோ கலிலி]], [[ஐசாக் நியூட்டன்]], [[லியோனார்டு ஆய்லர்]], [[ஜோசப் லூயி லாக்ராஞ்சி]], [[மைக்கேல் பரடே]], [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]], [[நீல்சு போர்]], [[மேக்ஸ் பிளாங்க்]], [[வெர்னர் ஐசன்பர்க்]], [[பால் டிராக்]], [[ரிச்சர்டு ஃபெயின்மான்]], [[ஸ்டீபன் ஹோக்கிங்]] போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது