இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மையக் கோட்பாடுகள்: *விரிவாக்கம்*
சி →‎மரபார்ந்த விசையியல்: *விரிவாக்கம்*
வரிசை 72:
[[படிமம்: Gyroscope operation.gif | thumb |ஒரு விசைக் கருவியான [[சுழல் காட்டி]].]]
மரபார்ந்த விசையியல் ஒளியின் வேகதை விட மிகக் குறைவான விரைவோட்டத்துடன் நகரும் பெரிய அளவிலுள்ள பொருட்களை விவரிக்கிறது. [[விசை]]களால் பாதிப்படைவதையும் பொருட்களின் நகர்வுகளையும் குறித்து ஆராய்கிறது. இதனை பொருட்கள் நிலையாக இருக்கும்போது அவற்றின் மீதான விசைகளின் தாக்கம் குறித்த [[நிலையியல்]] என்றும் காரணங்களைக் குறித்து இல்லாது நகர்வுகளை மட்டுமே ஆராயும் [[அசைவு விபரியல்]] என்றும் நகர்வுகளையும் அவற்றை பாதிக்கும் விசைகள் குறித்தும் ஆராயும் [[இயக்க விசையியல்]] உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். [[பொருண்ம விசையியல்]] மற்றும் [[பாய்ம இயந்திரவியல்]] எனவும் வகைப்படுத்தலாம். பாய்ம இயந்திரவியலில் [[பாய்ம நிலையியல்]], [[பாய்ம இயக்கவியல்]], [[காற்றியக்கவியல்]], மற்றும் [[காற்றழத்தவியல்]] உட்பிரிவுகளாகும். காற்று அல்லது பிற ஊடகங்களில் உள்ள துகள்களின் அசைவுகளினாலேயே ஒலி கடத்தப்படுவதால் [[ஒலி]]யைக் குறித்த ஒலியியல் விசையியலின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மனிதர்களால் கேட்கவியலாத அதியுயர் அதிர்வெண் உடைய ஒலி அலைகள் [[மீயொலி]] எனப்படுகின்றன.
===மின்காந்தவியல்===
{{Main|மின்காந்தவியல்}}
[[File: Magnetosphere rendition.jpg | thumb | 200px | காந்தக் கோளப் பரப்பு.]]
[[மின்புலம்| மின் புலத்தினாலும்]] [[காந்தப் புலம்| காந்தப் புலத்தினாலும்]] செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான [[மின்மம்| மின்மங்களின்]] இடையேயான வினையாற்றலான [[நிலைமின்னியல்]], அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் [[இயக்க மின்னியல்]] மற்றும் [[கதிர்வீச்சு]] என உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் [[லாரன்சு விசை]] மற்றும் [[மாக்சுவெல்லின் சமன்பாடுகள்|மாக்சுவெல்லின் சமன்பாடுகளை]] அடிப்படையாகக் கொண்டவை.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது