இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மரபார்ந்த விசையியல்: *விரிவாக்கம்*
சி →‎மின்காந்தவியல்: *விரிவாக்கம்*
வரிசை 76:
[[File: Magnetosphere rendition.jpg | thumb | 200px | காந்தக் கோளப் பரப்பு.]]
[[மின்புலம்| மின் புலத்தினாலும்]] [[காந்தப் புலம்| காந்தப் புலத்தினாலும்]] செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான [[மின்மம்| மின்மங்களின்]] இடையேயான வினையாற்றலான [[நிலைமின்னியல்]], அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் [[இயக்க மின்னியல்]] மற்றும் [[கதிர்வீச்சு]] என உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் [[லாரன்சு விசை]] மற்றும் [[மாக்சுவெல்லின் சமன்பாடுகள்|மாக்சுவெல்லின் சமன்பாடுகளை]] அடிப்படையாகக் கொண்டவை.
 
மின்காந்தவியல் [[ஒளி]] போன்ற பல நிகழ் உலக நிகழ்வுகளை விளக்குகிறது. ஒளியானது விரைந்தோடும் மின்னூட்டப்பெற்ற துகள்களிலிருந்து அலைவு [[மின்காந்தப் புலம்]] பரப்பப்படுவதாகும். ஈர்ப்பு விசையை அடுத்து நாள்தோறும் நாம் காணும் பெரும்பாலான நிகழ்வுகள் மின்காந்தவியலின் தாக்கத்தாலேயாகும்.
 
[[நுண்ணலை]], [[அலைவாங்கி]]கள், மின்கருவிகள், [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]], உயிரிமின்காந்தவியல், பிளாஸ்மா, அணுக்கரு ஆய்வுகள், [[ஒளியிழை]], மின்காந்த குறுக்கீடு மற்றும் ஒவ்வுமை, மின்னியந்திர ஆற்றல் மாற்றுதல், [[கதிரலைக் கும்பா]] மூலம் [[வானிலை]] மற்றும் சேய்மை கண்காணிப்பு போன்ற பல துறைகளில் மின்காந்தவியலின் தத்துவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. [[மின்மாற்றி]], [[உணாத்தி]]கள், [[வானொலி]] / [[தொலைக்காட்சி]], [[தொலைபேசி]]கள், மின் இயக்கிகள், அலைச்செலுத்திகள், [[ஒளியிழை]] மற்றும் [[சீரொளி]] ஆகியன சில மின்காந்தவியலைப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது