இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெப்ப இயக்கவியல்: *விரிவாக்கம்*
வரிசை 100:
===குவாண்டம் விசையியல்===
{{Main|குவாண்டம் விசையியல்}}
[[அணு]] அமைப்புகள் மற்றும் அணு உட்கூறமைவுகள் குறித்தும் மின்காந்த அலைகளுடன் இவற்றின் இடைவினைகள் குறித்தும் கண்காணிக்கக்கூடிய அளவுகளால் விவரிக்கின்ற இயற்பியலின் பிரிவே குவாண்டம் விசையியல் ஆகும். இது அனைத்து [[ஆற்றல்|சக்தி]]யும் தனித்தனி துணுக்கங்கள் அல்லது பொதிகள் அல்லது '' [[குவாண்டம்|குவாண்டங்களாக]] '' வெளிப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
 
குவாண்டம் கோட்பாட்டின்படி, அலைச்சார்பு மூலமாக அறிந்துகொள்ளக்கூடிய அடிப்படைத் துகள்களின் கவனிக்கப்படும் பண்புகளை குவாண்டம் விசையியல் [[நிகழ்தகவு]] அல்லது [[புள்ளியியல்| புள்ளிநிலை]] கணக்குகள் மூலமே நிரூபிக்கிறது. மரபார்ந்த விசையியலின் மையமாக [[நியூட்டனின் இயக்க விதிகள்|நியூட்டனின் இயக்க விதிகளும்]] [[ஆற்றல் அழிவின்மை]]யும் அமைந்துள்ளதைப் போன்று குவாண்டம் விசையியலில் [[சுரோடிங்கர் சமன்பாடு]] மையமாக உள்ளது. ஓர் இயங்கு அமைப்பின் வருங்கால நடத்தையை முன்னறியவும் பகுத்தாய்ந்து நிகழ்வுகளின் அல்லது முடிவுகளின் சரியான நிகழ்தகவுகளை [[அலை இயக்கம்|அலை இயக்க]] சார்புகள் மூலம் தீர்மானிக்கவும் இச்சமன்பாடு உதவுகிறது.
 
மரபார்ந்த விசையியலில் பொருட்கள் குறிப்பிட்ட தனித்தன்மையான வெளியை நிரப்பியிருப்பதுடன் தொடர்ந்து இயங்குகிறது. ஆனால் குவாண்டம் விசையியலில் ஆற்றல் துணுக்கங்களாக வெளியிடப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் இயங்குகிறது. இந்த சத்திச்சொட்டு சில நேரங்களில் அணு உட்கூற்றுத் துகள்களைப் போன்றே நடந்து கொள்கின்றன. மேலும் சில துகள்கள் நகரும்போது அலைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன; இவை வெளியிடத்தில் குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்ளாது பரவி உள்ளது. குறிப்பிட்ட [[அதிர்வெண்]]களில் (அல்லது [[அலைநீளம்| அலைநீளங்களில்]]) உள்ள [[ஒளி]]யை அல்லது பிற கதிர்வீச்சை [[அணு]]க்கள் வெளியிடவோ உன்கொள்ளவோ செய்கின்றன; இவற்றை அந்த அணுக்களால் ஆன [[தனிமம்|தனிமத்தின்]] அலைக்கற்றைக் கோட்டிலிருந்து அறிய முடிகிறது. குவாண்டம் கோட்பாடு இந்த அதிர்வெண்கள் குறிப்பிட்ட ஒளி குவாண்டம்களுக்கு ([[ஒளியணு]]) ஒத்திருப்பதாக காட்டுகிறது. இது அணுவிலுள்ள [[எதிர்மின்னி]]கள் குறிப்பிட்ட ஆற்றல் மதிப்புக்களையே கொள்ள அனுமதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. ஒர் எதிர்மின்னி தனது ஆற்றல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும்போது இவ்விரு ஆற்றல் மதிப்புக்களுகிடையே ஆன ஆற்றல் சத்திச்சொட்டாக வெளியிடப்படுகிறது அல்லது உட்கொள்ளப்படுகிறது. இந்த ஒளியலையின் அதிர்வெண் ஆற்றல் வேறுபாட்டிற்கு நேரடித் தொடர்புடன் உள்ளது.
 
The discovery of quantum mechanics in the early [[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] துவக்கத்தில் கண்டறியப்பட்ட குவாண்டம் விசையியல் இயற்பியலில் ஓர் புரட்சியாக அமைந்தது. தற்கால இயற்பியலின் ஆய்வுகளில் அடிப்படையாக குவாண்டம் விசையியல் அமைந்துள்ளது.
 
== இயற்பியலின் பிரிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது