"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
====ஆஃகன் மற்றும் ஊர்ட்கென் காடு====
[[படிமம்:GI machine gun crew in Aachen (Correct orientation).jpg|right|thumb|250px|ஆஃகன் நகரத்தில் அமெரிக்க எந்திரத் துப்பாக்கி வீரர்கள்]]
சிக்ஃபிரைட் கோட்டினை அணுகுவதற்கு முன்னர் [[ஆஃகன்]] நகரை நேச நாட்டுப் படைகள் கைப்பற்ற வேண்டியிருந்தது. அக்டோபர் 2, 1944ல் அமெரிக்க 1வது ஆர்மி ஆஃகன் நகர் மீதான [[[ஆஃகன் சண்டை|தாக்குதலைத்]] தொடங்கியது. அமெரிக்க 30வது டிவிசன் அக்டோபர் 2ம் தேதி வடதிசையிலிருந்து ஆஹன் நகரைத் தாக்கியது. ஐந்து நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னரே இரு படைப்பிரிவுகளும் கை கோர்த்தன. இச்சண்டை நடந்து கொண்டிருக்கும் போது அமெரிக்க பீரங்கிகள் ஆஹன் நகரின் மீது தொடர்ந்து குண்டு வீசின. அக்டோபர் 16ம் தேதி இரு அமெரிக்க டிவிசன்களும் சேர்ந்து நகருக்குள் முன்னேறத் தொடங்கின. அக்டோபர் 16-21ல் ஆஹனஆகன் நகரத் தெருக்களில் இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. நகரெங்கும் கட்டப்பட்டிருந்த அரண்நிலைகள், வீடுகளின் நிலவறைகள், பதுங்குகுழிகள், பாதாளச் சாக்கடைகள் போன்றவற்றிலிருந்து தாக்கும் ஜெர்மானியப் படைகளை சமாளித்து அமெரிக்கப் படைகள் மெல்ல நகரின் மையப்பகுதியை நோக்கி முன்னேறின. கடும் சண்டைக்குப்பின் 21ம் தேதி ஜெர்மானியத் தளபதி மில்க் ஆஹன் நகர் சரணடைவதாக அறிவித்தார். இச்சண்டையில் இரு தரப்பிலும் தலா 5,000 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 5,000 ஜெர்மானியப் படைவீரர்கள் [[போர்க்கைதி|கைது செய்யப்பட்டனர்]]. ஆஹன் நகர் அமெரிக்கர் வசமானாலும், நேசநாட்டுப் படைகளின் இழப்புகளால் ஜெர்மனியின் உட்பகுதியுள் நேசநாட்டு முன்னேற்றம் தடைபட்டது.
 
[[படிமம்:Bundesarchiv Bild 183-J28303, Hürtgenwald, schweres Infanteriegeschütz.jpg|right|thumb|250px|ஊர்ட்கென் காட்டில் ஜெர்மானிய பீரங்கி]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1392076" இருந்து மீள்விக்கப்பட்டது