இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 43:
இயற்பியல் அறிமுறைக் கொள்கை முன்னேற்றங்கள் புதிய [[தொழினுட்பம்|தொழினுட்பங்கள்]] உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. காட்டாக, [[மின்காந்தவியல்]] அல்லது [[அணுக்கருவியல்]] குறித்த கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றம் ஏற்படுத்திய [[தொலைக்காட்சி]], [[கணினி]]கள், [[வீட்டுக் கருவி]]கள், மற்றும் [[அணு குண்டு]]கள் போன்ற கருவிகள் உருவாக்கத்திற்கு காரணமாயின; [[வெப்ப இயக்கவியல்]] ஆய்வுகளால் [[தொழில்மயமாதல்|தொழில்மயமானது]]; [[விசையியல்]] முன்னேற்றங்கள் [[நுண்கணிதம்|நுண்கணித]] வளர்ச்சிக்கு வித்தானது.
 
இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை [[டெமோக்கிரட்டிசு]], [[எரோசுதெனீசுஎரடோசுதெனீசு]], [[அரிசுட்டாட்டில்]] போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி [[கலீலியோ கலிலி]], [[ஐசாக் நியூட்டன்]], [[லியோனார்டு ஆய்லர்]], [[ஜோசப் லூயி லாக்ராஞ்சி]], [[மைக்கேல் பரடே]], [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]], [[நீல்சு போர்]], [[மேக்ஸ் பிளாங்க்]], [[வெர்னர் ஐசன்பர்க்]], [[பால் டிராக்]], [[ரிச்சர்டு ஃபெயின்மான்]], [[ஸ்டீபன் ஹோக்கிங்]] போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது