கங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சடைமுடியில் கங்கை
வரிசை 3:
'''கங்கை''' [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] கூறப்பட்டுள்ள படி ஒரு பெண் தெய்வமாகும். கங்கை நதியை இந்துக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். இதில் குளித்தால் பாவங்கள் தீரும் என நம்புகின்றனர். கங்கையை மகாபாரதத்தில் பீஷ்மரின் தாய் என்று குறிப்பிடுகின்றார்கள். சிவனின் ஜடாமுடியில் கங்கை வசிப்பதாகவும் கதையுண்டு. கங்கையை சிலர் சிவனின் மனைவி என்று கூறுவதுண்டு.
 
==சிவபெருமான் சடாமுடியில் கங்கை==
 
[[File:Ravi Varma-Descent of Ganga.jpg|thumb|right|200px|கங்கையினை சடாமுடியில் தாங்கும் சிவபெருமான்]]
 
சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் [[பகீரதன்]]. தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை [[வசிட்டர்]] வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் [[பிரம்மாவை|பிரம்மனை]] நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ ''நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்'' என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, ''நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின்'' என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் சிவன் வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. இதனால் சிவபெருமான் [[கங்காதரன்]] என்று அழைக்கப்படுகிறார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது