தொடரும் பின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைப்பு சரிப்படுத்தப்பட்டது
வரிசை 9:
==வரலாறு==
 
தொடர்பின்னங்கள் பல நூற்றாண்டுகளாக கணித உலகத்தில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தாலும், 17, 18 வது நூற்றாண்டில் தான் ஒரு சீரடைந்த கோட்பாடாகப் புழங்கத்தொடங்கியது. [[யூக்லீடின் அல்காரிதம்]] என்று பெயர் பெற்ற செயல் முறை தொடர் பின்னத்தின் மறு அவதாரம் தான். ஆனால் அந்தக் காலத்தில் [[யூக்ளிட்|யூக்லீடோ]] அல்லது வேறு எவரோ அதை அந்த நோக்கில் பார்த்ததாகத் தெரியவில்லை. 6வது நூற்றாண்டில் இருந்த இந்தியக் கணித வல்லுனர் [[ஆரியபட்டர்]], [[தேரவியலா சமன்பாடுகளை ]] (Indeterminate Equations)விடுவிக்க தொடர்பின்னங்களை வெகுவாக பயன்படுத்தினார். 1695 இல் தொடர்பின்னங்களை ஒரு கோட்பாடாக எழுதின [[ஜான் வல்லிஸ்]] என்பவர் தான் தொடர்பின்னம் என்ற பெயரையும் அதையொட்டி '''ஒருங்குகள்''' என்ற கருத்தையும் அறிமுகப்படுத்தினார். பிற்பாடு [[ஆய்லர்]] (1707-1783), [[லாம்பர்ட்]] (1728 -1777), மற்றும் [[லக்ராஞ்சி]] (1736-1813) முதலியோர் தொடர்பின்னங்களை ஆழமாக ஆய்வுசெய்தனர். இதையெல்லாம் பார்க்காமலேயே இருபதாவது நூற்றாண்டில் இந்தியக்கணித மேதை [[ஸ்ரீனிவாச ராமானுஜன்]](1887 - 1920) எண் கோட்பாட்டில் தொடர்பின்னங்களை மூட்டை மூட்டையாகப் பயன்படுத்திய விந்தையை இன்னும் உலகக்கணித வல்லுனர்கள் அலசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
==அறிமுகம்==
"https://ta.wikipedia.org/wiki/தொடரும்_பின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது