ஒலிம்பிக்கு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டிலுள்ள [[ஒலிம்பியா]]வில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் [[பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ்]] கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
 
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[பராஒலிம்பிக் விளையாட்டுகள்]], பதின்ம வயதினருக்கான [[இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்]] என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு [[1924]] முதல் [[குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [[1994]] முதல் [[கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன.
 
== ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்கு_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது