பிரித்தானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 96 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8:
 
== தொடக்கம் (1497-1583) ==
[[பெரிய பிரித்தானியாவின்பிரித்தானியா]] வின் [[ஐக்கிய இராச்சியம்]] உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் [[இங்கிலாந்து]]ம் [[ஸ்காட்லாந்து]]ம் தனித்தனி அரசுகளாக இருந்தன. [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரதும்]], [[ஸ்பெயின்|ஸ்பானியர்களதும்]] கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, [[1496]] ஆம் ஆண்டில், [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசரான [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி|ஏழாம் ஹென்றி]], வட அத்திலாந்திக் வழியாக [[ஆசியா]]வுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக [[ஜான் கபோ]] (John Cabot) என்பவரை அமர்த்தினார். [[1497]] இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, [[ஆசியா]] எனத் தவறாகக் கருதிக் [[கனடா]]வில் இறங்கினார். ஆனாலும், [[குடியேற்றம்|குடியேற்றங்களை]] உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ [[அமெரிக்கா]]க்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது [[கப்பல்]]களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், [[முதலாம் எலிசபெத்]]தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. [[ஆங்கில - ஸ்பானியப் போர்]]க் காலத்தில், [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் [[பகைமை]]யும் போட்டியும் நிலவின. சர் [[ஜான் ஹோக்கின்ஸ்]], சர் [[பிரான்சிஸ் டிரேக்]] போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் [[துறைமுகம்|துறைமுகங்களையும்]], புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான [[ரிச்சார்ட் ஹக்லுயிட்]], [[ஜான் டீ]] ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, [[ஆபிரிக்கா]], [[பிரேசில்]], [[சீனா]] ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் [[வணிக நிலை]]களை அமைத்திருந்தது. பிரான்ஸ் [[செயிண்ட் லாரன்ஸ் ஆறு|செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப்]] பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது.
 
=== அயர்லாந்தின் பெருந்தோட்டங்கள் ===
கடல் கடந்த குடியேற்றங்களைப் பொறுத்த அளவில், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்து ஒரு பிந்திய வரவாக இருந்தாலும் அயர்லாந்தில் அது ஒருவகையான உள்நாட்டுக் குடியேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பெருந்தோட்டங்களை நடத்திவந்த ஆங்கிலக் குடியேற்றக்காரர்கள் பிரித்தானியப் பேரரசின் உருவாக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தனர் எனலாம். இத்திட்டங்களில் ஈடுபட்டிருந்த பலருக்கு, குறிப்பாக, "மேற்கு நாட்டார்" (West Country men) என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு குழுவினருக்குத் தொடக்க கால வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் ஈடுபாடு இருந்தது. சர் ஹம்பிரி கில்பர்ட், சர். வால்ட்டர் ராலி, சர். பிரான்சிஸ் டிரேக், சர். ஜான் ஹோக்கின்ஸ், ரிச்சார்ட் கிரென்வில், சர். ரால்ஃப் லேன் ஆகியோர் இவர்களுள் அடங்கியிருந்தனர். அயர்லாந்தைக் குரொம்வெல்லின் படைகள் ஆக்கிரமித்த பின்னர், பெரும்பான்மை ஐரியக் [[கத்தோலிக்கர்]] தமது நிலங்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த [[புரட்டஸ்தாந்தம்|புரட்டஸ்தாந்திய]] நில உரிமையாள வகுப்பினர் அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டனர்.
 
== முதல் பிரித்தானியப் பேரரசு (1583 - 1783) ==
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது