பிரித்தானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
== தொடக்கம் (1497-1583) ==
[[பெரிய பிரித்தானியா]] வின் [[ஐக்கிய இராச்சியம்]] உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் [[இங்கிலாந்து]]ம் [[ஸ்காட்லாந்து]]ம் தனித்தனி அரசுகளாக இருந்தன. [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கீசரதும்]], [[ஸ்பெயின்|ஸ்பானியர்களதும்]] கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, [[1496]] ஆம் ஆண்டில், [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] அரசரான [[இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி|ஏழாம் ஹென்றி]], வட அத்திலாந்திக் வழியாக [[ஆசியா]]வுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக [[ஜான் கபோ]] (John Cabot) என்பவரை அமர்த்தினார். [[1497]] இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, [[ஆசியா]] எனத் தவறாகக் கருதிக் [[கனடா]]வில் இறங்கினார். ஆனாலும், [[குடியேற்றம்|குடியேற்றங்களை]] உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ [[அமெரிக்கா]]க்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது [[கப்பல்]]களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், [[முதலாம் எலிசபெத்]]தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. [[ஆங்கில - ஸ்பானியப் போர்]]க் காலத்தில், [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் [[பகைமை]]யும் போட்டியும் நிலவின. சர் [[ஜான் ஹோக்கின்ஸ்]], சர் [[பிரான்சிஸ் டிரேக்]] போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் [[துறைமுகம்|துறைமுகங்களையும்]], புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான [[ரிச்சார்ட் ஹக்லுயிட்]], [[ஜான் டீ]] ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, [[ஆபிரிக்கா]], [[பிரேசில்]], [[சீனா]] ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் [[வணிக நிலை]]களை அமைத்திருந்தது. பிரான்ஸ் [[செயிண்ட் லாரன்ஸ் ஆறு|செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப்]] பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது.
 
=== அயர்லாந்தின் பெருந்தோட்டங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது