"மலாய-பொலினீசிய மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,369 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மலாய-பொலினீசிய மொழிகள்''' என்பன [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆஸ்திரோனீசிய மொழிகளின்]] ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 [[மில்லியன்]] மக்கள் இம் மொழிகளுள் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இம் [[மொழி]]கள் [[தென்கிழக்கு ஆசியா]]விலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் [[தீவு]] நாடுகளிலும், சிறிய அளவில் தலை நில [[ஆசியா]]விலும் பேசப்படுகின்றன. இக் குழுவைச் சேர்ந்த [[மலகாசி மொழி]], இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியற் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள [[மடகாஸ்கர்]] தீவில் பேசப்படுகிறது.
 
[[பன்மை]]யைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆஸ்திரோனீசிய மொழிகளைப்]] போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் [[கூட்டுமெய்கள்]] (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல [[உயிரொலி]]களையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.
 
[[பகுப்பு:மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139703" இருந்து மீள்விக்கப்பட்டது