பயனெறிமுறைக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: ca, da, de, el, eo, es, et, fi, fr, he, hu, is, it, ja, mk, nl, pl, pt, ro, ru, simple, sk, sv, tr, uk, zh
வரிசை 1:
'''பயனெறிமுறைக் கோட்பாடு''' அல்லது '''பயனோக்கு கோட்பாடு''' (''Utilitarianism'') என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த [[பயனுடைமை]]யைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான [[மெய்யியல்]] [[கோட்பாடு]] ஆகும். இது ஒரு வகையான [[விளைவுநெறிமுறைக் கோட்பாடு]] ஆகும். இக்கோட்பாட்டின்படி ''பயனுடைமை'' என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் [[பண்டம்|பண்டமாகக்]] கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். [[மகிழ்ச்சி]] மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற [[விருப்பச்சார்பு பயனோக்காளர்கள்]] எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது [[மா]]க்களையும் உட்படுத்தி [[புலனுணர்வு]] பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர்.
 
[[பகுப்பு:பயனெறிமுறைக் கோட்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/பயனெறிமுறைக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது