டி. ஆர். ராஜகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:திரைப்பட நடிகைகள் நீக்கப்பட்டது; [[பகுப்...
வரிசை 31:
கலைஞர் [[மு. கருணாநிதி]]யின் வசனத்தில் உருவான [[மனோகரா]] படத்தில் வசந்த சேனையாக இவர் தோன்றி நடித்திருந்தார். எம். கே. தியாகராஜா பாகவதர், பி. யூ. சின்னப்பா, எம். கே. ராதா, [[டி. ஆர். மகாலிங்கம்]], [[எம். ஜி. ஆர்]], [[சிவாஜி கணேசன்]] என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவர்தான்.
 
எம்.ஜி.ஆருடன் பணக்காரி (1953) இலும், சிவாஜியுடன் அன்பு படத்திலும் இணைந்து நடித்தார். தனது 37ஆவது வயதில் 1959 இல் சிவாஜியுடன் இணைந்து தங்கப்பதுமையில்[[தங்கப்பதுமை]]யில் நடித்திருந்தார்.
 
இவர் [[1963]] இல் கடைசியாக இரண்டு படங்கள் நடித்தார். கவியரசர் [[கண்ணதாசன்]] தயாரித்த [[வானம்பாடி]] படத்தில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்|எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு]] அக்காவாகவும், டி. ஆர். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த [[பெரிய இடத்துப் பெண்]] படத்தில் எம். ஜி.ஆருக்குச் சகோதரியாகவும் நடித்திருந்தார். அதற்குப் பின் படங்களில் நடிக்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._ராஜகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது