"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி: பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் ஐ மாற்றுகின்றது)
 
===விவாதத் திறன்===
கணேசையர் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் [[அரசன் சண்முகனார்|அரசன் சண்முகனாருடனான]] விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார். ஆனால் கணேசையர் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள்.
 
மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் புகழ் பெற்றது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
22,381

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1398204" இருந்து மீள்விக்கப்பட்டது