அரம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

07:54, 10 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

ரம்பை அல்லது அரம்பை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களின் தலைவியாவார்.

இராவணனுக்கு சாபம்

ரம்பை குபேரனின் மகனான நள-குபேரனின் மனைவி. குபேரனின் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் இராவணன். எனவே ரம்பை இராவணனது மருமகளாகிறாள். ஒரு முறை இராவணன் ரம்பையின் அழகில் மயங்கி அவளை நெருங்க, தன்னுடைய உறவுமுறையை அவனிடம் விளக்கி விலகுகிறாள் ரம்பை. அதையும் கேளாமல் இராவணன் வன்புணர்வு செய்தமையை தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதையறிந்த நள-குபேரன் பெண்ணின் அனுமதியின்றி இராவணன் சீண்டினால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபமிடுகிறான். [1]

தலம்

திருக்கோட்டூர் கொழுந்தீசர் கோவிலில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். இவ்வாறன அமைப்புடன் ரம்பையின் உருவச்சிலை கோவிலில் உள்ளது.

கருவி

இன்றும் இனிக்கும் இதிகாசம் 12 - திருப்பூர் கிருஷ்ணன் (தினகரன்)

காண்க

ரம்பை தேவ உலகம்

ஆதாரம்

  1. http://www.kalachuvadu.com/issue-159/page78.asp கடிதங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரம்பை&oldid=1398832" இலிருந்து மீள்விக்கப்பட்டது