எம். வி. வெங்கட்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1920]] ஆம் ஆண்டு [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[சௌராஷ்டிர மொழி|சௌராஷ்டிர]]க் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] இளமாணிப் பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் [[பட்டு]]ச் [[சரிகை]] [[வணிகம்]] செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். [[1941]]-[[1946]] காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். [[1948]] இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.
 
பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன
"https://ta.wikipedia.org/wiki/எம்._வி._வெங்கட்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது