ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[Image:Australia vs India.jpg|thumb|300px|[[அவுஸ்திரேலியா]] எதிர் [[இந்தியா]] ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்ட போட்டி]]
 
'''ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்''' என்பது இரு [[நாடு|நாட்டு]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணிகளுக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட [[பந்துப் பரிமாற்றம்|பந்துப் பரிமாற்றங்கள்]] கொண்டதாக விளையாடப்படும் துடுப்பாட்ட வகையாகும். இது "மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் பன்னாட்டுப் போட்டி" எனவும் அழைக்கப்படுவதுண்டு. காலநிலை கோளாறு காரணாமாக போட்டிகள் தடைப்பட்டு போட்டி ஒரே நாளில் முடிவுறாமல் போகும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதற்காக ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளின் போது மேலதிக நாள் ஒதுக்கப்படுவது உண்டு.
 
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். [[1971]] ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய [[இங்கிலாந்து]] அணிகளுக்கடையிலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரின் மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழை காரணமாகய்த் தடைப்படவே போட்டியைக் கைவிடப்பட நடுவர்களால் தீர்மானிக்கபட்டப் போது குழுமியிருந்த பார்வையாளருக்காக 8 பந்துகளைக் கொண்ட 40 பந்து பரிமாற்றங்களுடன் ஒரு நாள் போட்டியொன்றை விளையாட இரண்டு அணிகளும் தீர்மானித்தன. இதன்படி [[முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி]] [[ஜனவரி 5]] 1971அன்று அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்போன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் அவுஸ்திரேலியா 5 விகெட்டுகளால் வெற்றிப்பெற்றது. 1970களில் அவுஸ்திரேலிய பதிப்பாளர் கேரி பார்கர் என்பவர் உலகத் தொடர் ஒன்றை ஆரம்பித்தார். இதில் வர்ண சீருடைகள், வெள்ளைப்பந்து, செயற்கை ஒளி, விக்கெட் ஒலிவாங்கி போன்ற இன்றைய ஒருநாள் போட்டிகளில் உள்ள பல அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.
 
== முதல் ஒருநாள் போட்டி ==
உலகின்''முதல் ஒருநாள் போட்டி'' [[1971]] [[ஜனவரி 5]] ஆம் திகதி [[ஆஸ்திரேலியா]]வின் [[மெல்பேர்ண்]] நகரில் ஆஸ்திரேலிய, [[இங்கிலாந்து]] அணிகளுக்கிடையில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் தலா எட்டுப் பந்து வீச்சுகளைக் கொண்ட நாற்பது நாற்பது பந்துப் பரிமாற்றங்களைக் கொண்டதாக அமைந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 39.4 பந்துப் பரிமாற்றங்களில் 190 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34.6 பந்துப் பரிமாற்றங்களில் 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
 
== ஒருநாள் பன்னாட்டு போட்டி தகுதி பெற்ற அணிகள்==