"காய்ச்சல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 78 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
ஒருவருக்கு [[நோய்]] உண்டாக்கும் [[நுண்ணுயிரி]]களின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது '''காய்ச்சல்''' (fever) எனப்படுகின்றது. மனிதனுடைய [[உடல் வெப்பநிலை]] பொதுவான 98.6 [[பாகை]] F. (37 பாகை C.) இலும் அதிகமாகும்போது, காய்ச்சல் இருப்பதாகக் கொள்ளப்படலாம் ஆயினும், 100.4 பாகை F. (38 பாகை C.) அளவுக்கு வெப்பநிலை உயரும்வரை ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க அளவில் காய்ச்சல் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.
 
காய்ச்சல் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடல் வெப்பநிலை உயர்வதனால், பல நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. எனினும், இத்தகைய காய்ச்சல்கள், வேறு பிரச்சினகளுக்குரியபிரச்சினைகளுக்குரிய [[நோய்க்குறித் தொகுப்பு]]களுடன் (symptoms) சேர்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகின்றது. 100.4 பாகை F. வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் ஏறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. [[சன்னி]], [[வலிப்பு]] முதலியவை ஏற்படக்கூடும். இத்தகைய காய்ச்சல்களுக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை.
 
காய்ச்சலைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்துகள் [[காய்ச்சலடக்கி]]கள் எனப்படுகின்றன. [[பாராசித்தமோல்]], [[ஆஸ்பிரின்]] போன்றவை இவற்றுள் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1400066" இருந்து மீள்விக்கப்பட்டது