ஒலிம்பிக்கு விளையாட்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான [[ஏராக்கிள்சு]] தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு [[இசுட்டேடியன்]] என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.
 
அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய [[பெலோப்சு]]வையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.
 
ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிரையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், [[முதலாம் தியடோசியசு]] எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான [[இரண்டாம் தியடோசியசு]], எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான்.
 
== ஒலிம்பிக்சு நடந்த இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்கு_விளையாட்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது