44,519
தொகுப்புகள்
[[படிமம்:800px-Olympic-rings.png|200px|thumb|இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913ல் வடிவமைக்கப்பட்டு, 1914ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன]]
'''ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' ('''Olympic Games''' அல்லது '''Olympics''') என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.<ref name="EB"
}}</ref> பண்டைய [[கிரீஸ்]] நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற [[பிரான்ஸ்]] நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு [[அனைத்துலக ஒலிம்பிக் குழு]]வை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் [[ஒலிம்பிக் பட்டயம்|ஒலிம்பிக் பட்டயத்தினால்]] வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே [[ஒலிம்பிக் இயக்கம்|ஒலிம்பிக் இயக்கத்தை]] நிர்வகித்து வருகிறது. [[உலகப் போர்]] நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, [[1896]] முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் [[கிரேக்கம்|கிரேக்க]] நாட்டிலுள்ள [[ஒலிம்பியா]]வில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் [[பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ்]] கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[பராஒலிம்பிக் விளையாட்டுகள்]], பதின்ம வயதினருக்கான [[இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்]] என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு [[1924]] முதல் [[குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. [[1994]] முதல் [[கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.
|