குழந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
வரிசை 1:
{{Infobox person
| name=குழந்தை பிரான்சிசு
| image =
| birth_date=1946
| birth_place= [[சேலம் மாவட்டம்]] [[தமிழ்நாடு]]
| party =
| movement=
| organization =ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம் (Integrated Village Development Project)
| education =
| alma_mater =[[அண்ணாமலை பல்கலைக்கழகம்]]
| children =
| website=
| module =
}}
 
'''குழந்தை பிரான்சிசு''' (Kulandei Francis, பிறப்பு:1947) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஓர் தன்னார்வலத் தொண்டு நிறுவனர். ''ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம்'' (Integrated Village Development Project) என்ற அரசுசாரா தன்னார்வல அமைப்பை நிறுவி [[கிருஷ்ணகிரி]] மாவட்டத்தில் உள்ள வறியவர்களுக்கு தமது சொந்தக் கால்களில் நிற்கத் துணை நின்றவர். 2012க்கான [[மக்சேசே பரிசு|ரமன் மக்சேசே]] பரிசு பெற்றவர்களில் ஒருவராவார்<ref name="குழந்தை பிரான்சிசுக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது.">{{cite web | url=http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationKulandeiFran.htm | title=குழந்தை பிரான்சிசுக்கு ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுகிறது. | accessdate=மார்ச்சு 20, 2013}}</ref>.
 
[[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] காரிப்பட்டி சிற்றூரில் ஓர் வறிய குடும்பத்தில் தந்தை குழந்தை மற்றும் தாய் மாதளைமதலை மேரிக்கு மகனாகப் பிறந்தார். தங்கள் மகன் நன்கு கற்றுத்தேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரான்சிசின் பெற்றோர் தங்களிடமிருந்த ஒரே நிலத்துண்டையும் விற்று அவரை [[அண்ணாமலை பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைகழகத்தில்]] பட்டப்படிப்பு படிக்க உதவினர். ஓர் கிறித்தவப் பாதிரியாக விரும்பிய பிரான்சிஸ் 1970இல் ''பாதர்ஸ்திருச்சிலுவைத் ஆப்துறவியர் ஹோலி கிராசில்சபையில்'' இணைந்தார். அவர்களால் [[மகாராட்டிரம்|மகாராட்டிராவிலுள்ள]] [[புனே]]யில் [[இறையியல்]] படிக்க அனுப்பப் பட்டார். அந்தப் படிப்பின் தொடர்பாக 1971ஆம் ஆண்டு [[வங்காளதேச விடுதலைப் போர்|வங்காளதேச போரில்]] துயர் துடைப்பு பணிகளில் ஈடுபட்டார். 1972ஆம் ஆண்டு புனேயில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு துயர் துடைப்புப் பணிகளிலும் பங்கேற்றார்.
 
வறியவர்களின் வாழ்நிலையை ஏற்றிட விருப்பமுற்ற பிரான்சிஸ் [[கனடா]]விலுள்ள கோடி பன்னாட்டு கழகத்தில் சமூக மேம்படுத்தல் கல்வியையும் [[பிலிப்பைன்சு]] நாட்டில் ஊரக மேலாண்மை கல்வியையும் கற்றார்.
 
கோசலை மேரியை மணமுடித்துள்ள பிரான்சிசுக்கு சுனிதா நதினிநந்தினி எஸ்தர் என்ற பெண் உள்ளார். இவரது தன்னார்வலத் திட்டப்பணிகளில் மனைவியும் மகளும் துணை நிற்கின்றனர்.<ref>{{cite web|title=Integrated Village Development Project - Krishnagiri|url=http://ivdpkrishnagiri.org/index.php?option=com_content&view=article&id=167&Itemid=555}}</ref><ref name="indianexpress">{{cite news|title='Poverty is a crime; it needs to be eliminated'|url=http://www.indianexpress.com/news/poverty-is-a-crime--it-needs-to-be-eliminated/986145/0|newspaper=The Indian Express|date=August 12, 2012}}</ref><ref>{{cite web|title=Kulandei Francis: Who is he?|url=http://indiatoday.intoday.in/story/kulandei-francis-who-is-he/1/210459.html|publisher=India Today|accessdate=26 July 2012}}</ref>
 
==ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம்==
 
1979இல் பிரான்சிசு ''ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டம்'' (Integrated Village Development Project - IVDP) என்னும் தன்னார்வல தொண்டு நிறுவனத்தை கிருஷ்ணகிரியில் நிறுவினார். இரவு பள்ளிக்கூடம், முதல் உதவி நிலையம் போன்ற சிறு திட்டங்களோடு அது தொடங்கியது. பின்னர், மண்ணரிப்பைக் குறைப்பதற்காக நீர் ஓடும் ஓடைகளின் குறுக்கே கட்டப்படுகின்ற [[தடுப்பணை|தடுப்பணைகள்]] கட்டும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டது. 60 கிராமங்களில் இத்தகைய 331 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 40 ஆயிரம் மக்களுக்குப் பயன் ஏற்பட்டுள்ளது. <ref name="indianexpress" />
 
==தன்னுதவிக் குழுக்கள் ஏற்படுத்தல்==
''ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின்'' முயற்சியால் 1989இல் பெண்களுக்கான தன்னுதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. 2011ஆம் ஆண்டளவில் இத்தகைய தன்னுதவிக் குழுக்கள் 8231 நிறுவப்பட்டு, 153,990 உறுப்பினர்கள் பயன்பெறுகின்றனர். அவர்களது சேமிப்பு நிதி 40 மில்லியன் டாலர், கூட்டு நிதி சுமார் 9 மில்லியன் டாலர். <ref>{{cite news|title=India's Kulandei Francis wins Ramon Magsaysay Award|url=http://indiatoday.intoday.in/story/indian-kulandei-francis-wins-ramon-magasaysay-award/1/210253.html|newspaper=India Today|date=July 26, 2012}}</ref>
 
==ரமோன் மக்சேசே விருது வழங்கப்படுதல்==
குழந்தை பிரான்சிசு தொடங்கி நடத்துகின்ற ''ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின்'' சேவையைப் பாராட்டி 2012ஆம் ஆண்டுக்கான [[ரமோன் மக்சேசே விருது]] வழங்கப்பட்டது. பரிசுப் பட்டயத்தில் பின்வரும் கருத்துகள் குறிக்கப்பட்டன:
*குழந்தை பிரான்சிசு தொடங்கிய திட்டம் நிதிமுறையில் கட்டுப்பாடு, தன்னிறைவு கொண்டு, உறுப்பினருக்கு உரிமையானதாகவும் உறுப்பினரால் நடத்தப்படுவதாகவும் இருப்பது சிறப்பு.
*நலவாழ்வு, வீட்டுவசதி, வாழ்க்கைத் தேவை, குழந்தைக் கல்வி, கல்வி உதவி, மாணவரின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி, ஆதிதிராவிடக் குழந்தைகளுக்குக் கல்விக்கூடம், 5000க்கும் மேலான மாணவர்களுக்குப் பயிற்சியளித்துள்ள கணினி பயிற்சிமையம் போன்றவை இந்த நிறுவனத்தின் சாதனைகள்.<ref>[http://www.rmaf.org.ph/Awardees/Citation/CitationKulandeiFran.htm மகசேசே பரிசுப் பத்திரம்]</ref>
 
குழந்தை பிரான்சிசு நிறுவி நடத்திவருகின்ற திட்டம் இன்று தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.<ref>{{cite news|title=Kulandei Francis' visionary zeal fetches him the Magsaysay|url=http://www.thehindu.com/news/national/article3683671.ece|newspaper=The Hindu|date=July 26, 2012}}</ref>
 
==குறிப்புகள்==
<references/>
{{Reflist}}
 
{{DEFAULTSORT:Francis, Kulandei}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 14 ⟶ 49:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[en:Kulandei Francis]]
[[ml:കുഴന്തൈ ഫ്രാൻസിസ്]]
"https://ta.wikipedia.org/wiki/குழந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது