தவமாய் தவமிருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24:
{{கதைச்சுருக்கம்}}
 
ராமனாதனும் (செந்தில்) ராமலிங்கமும் (சேரன்) எளிய பொருளாதாரப் பின்னணி கொண்ட கிராமத்துப் பெற்றோர்களான முத்தையா (ராஜ்கிரண்) மற்றும் சாரதாவின் (சரண்யா) குழந்தைகள். பிள்ளைகளை பல சிரமங்களுக்கு இடையில் முத்தையா படிக்க வைக்கிறார். அண்ணன் ராமனாதன் படிப்பில் நாட்டம் குறைந்து Polytechnic படிப்பு படிக்கச் செல்ல, ராமலிங்கம் பொறியியல் படிக்கிறார். ஒழுக்கம் கெட்டுப் போகும் ராமனாதனை கட்டுப்படுத்தி வைக்க, லதாவை (மீனாள்) அவனுக்கு மணமுடித்து வைக்கின்றனர். திருமணத்துக்கு பின் குடும்பத்தில் எழும் சச்சரவுகள் காரணமாக, ராமனாதன் தனிக்குடித்தனம் செல்கிறார். கல்லூரித் தோழியான வசந்தியுடன் (பத்ம்பிரியா) காதல் வசப்பட்டு அவருடன் உடலுறவு கொள்ளும் ராமலிங்கம் வசந்தியை கர்ப்பமாக்குகிறார். ஊர் கண்ணில் இருந்து கர்ப்பத்தை மறைக்க ராமனாதனும்ராமலிங்கமும் வசந்தியும் பெற்றோருக்கு தெரிவக்காமல் சென்னைக்கு செல்கின்றனர். இரு மகன்களின் செய்கையினால், முத்தையாவும் சாரதாவும் மனமுடைந்து போகின்றனர்.
 
சென்னையில் தன் படிப்புத் தகுதிக்கு குறைந்த வேலையை தேடிக்கொள்ளும் ராமலிங்கம் சிரமமான வாழ்க்கை நடத்துகிறார். வசந்திக்கு குழந்தை பிறந்ததை அறிந்து பேரக்குழந்தையை பார்க்க வரும் முத்தையா பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார். அவரின் பாசத்தை கண்டு மனம் வெட்கும் ராமலிங்கம் ஊருக்குத் திரும்பி தங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறான். சிறு மனப்போராட்டத்துக்கு பிறகு, அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ராமலிங்கம், வசந்தி இருவரும் தங்கள் படிப்புக்கேற்ற வேலை பெற்று மதுரைக்கு குடியேறுகின்றனர். பெற்றோரையும் மதுரைக்கு அழைத்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்து மனமகிழ்வுடன் கவனித்துக் கொள்கின்றனர். பெற்றோருடன் ஒட்டாமல் வாழும் அண்ணன் ராமனாதனையும் குடும்பத்துடன் இணைக்கிறார் ராமலிங்கம்.
"https://ta.wikipedia.org/wiki/தவமாய்_தவமிருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது