சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 107 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 10:
# கூட்டுநிலை, தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரதும் வாழ்க்கைக் காலத்தையும் தாண்டி நிலைக்கக்கூடியது.
# மனித நிலைமைகள் எப்பொழுதும் எமது புலன்கள் தரும் சான்றுகளுக்கும் அப்பால் செல்லுகிறது; நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் கூட்டுநிலையோடு பிணைக்கப்பட்டுள்ளது.
==பொதுவுடமை குருத்தியலில் சமூகம்==
===ஆதி பொதுவுடமை சமூகம்===
உற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. கல் ஆயுதங்கள் முதல் வில் அம்பு வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் இயற்கையையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது.
===அடிமை சமூகம்===
இதில் உற்பத்திச் சாதனங்கள் அடிமை எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை மிருகங்கள் போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் இரும்பு, செம்பு போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. விவசாயம்,கைத்தொழில் வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். தனியுடமை, அரசு, குடும்பம் தோன்றின.
===நிலப்பிரபுத்துவ சமூகம்===
உற்பத்திச் சாதனங்களனைத்தும் இதில் நிலப்பிரபுவுக்கு சொந்தம். ஆனால் உழைப்பாளி நிலப்பிரபுவின் அடிமையல்ல. அவனை முன்பு போல் மிருகம் போல வாங்கி விற்பது, கொலை செய்வது முடியாது. கருவிகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இரும்பை உருக்கி கருவிகள, கலப்பைகள், தறிகள் என்று கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. முன்பு அடிமையாக இருந்தோர் தற்போது சொந்த வேளாண்மை, கைத்தொழில் செய்யலாம். ஆனால் நிலப்பிரபுவுக்காக உழைக்க வேண்டும். சாகுபடி செய்து அறுவடையில் பங்குதர வேண்டும். இந்த முறையில் சுரண்டல் கொடுமை நெடுங்காலம் நீடித்தது.
===முதலாளித்துவ சமூகம்===
இதில் உறபத்திச் சாதனங்களான தொழிற்சாலைகளும், கருவிகளும் முதலாளிக்கு சொந்தம். உற்பத்தி கருவிகள் உழைப்பாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளி தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில்கள் சிதைந்து எந்திர உற்பத்தி பெருமளவில் வளர்ச்சியடைந்தது. நிலங்கள் முதலாளித்துவ விவசாய பண்ணைகளாய் உருமாறின. விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றால் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது.
===பொதுவுடைமை சமூகம்===
முதலாளித்துவ முரண்பாடுகளாலும், உற்பத்தியின் சமூக தன்மைக்கு உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமை விரோதமானதாக ஆகிறது. இதனால் புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் வீழ்ந்து பொதுவுடைமை சமூகம் பிறக்கிறது. இச்சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், கருவிகளும் சமுதாய உடைமையாகின்றன. உழைப்புக்கேற்ற பங்கீடு கிடைக்கும். உழைக்காதவனுக்கு சோறில்லை. இச்சமூகத்தில் உற்பத்தி சக்திகளுக்கு முற்றிலும் பொருத்தமான உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன.
 
[[பகுப்பு:சமூகவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது