பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 68:
 
பெட்ரோனாஸ் கோபுரங்களின் அடித்தளங்களில் பல ஆயிரம் டன்கள் பைஞ்சுதை கல்காரை ஊற்றப்பட்டுள்ளது. இந்த அடித்தளங்களுக்கான வேலைகள் 12 மாதங்களில் முடிவுற்றது. இந்த ஒரு வேலையை மட்டும் பாச்சி சோலேதாஞ்சே ({{lang-en|Bachy Soletanche}})<ref>[http://www.bachy-soletanche.com.hk/en/index.php Bachy Soletanche Group was incorporated in Hong Kong in 1973 and became Bachy Soletanche Group Limited (BSGL) in 1999.]</ref> எனும் பிரித்தானிய நிறுவனம் செய்து முடித்தது. <ref>[http://www.thepetronastowers.com/2010/03/petronas-towers-%E2%80%93-detailed-structural-analysis/ Each tower used 11,000 tons reinforcement steel, 2,825,120 cubic feet of high-strength concrete, almost 7,500 tons structural steel beams and 830,000 s.ffeet glass windows.]</ref> இதற்கு டோமோ ஒபியாசே எனும் [[எயிட்டி|ஹைத்திய]] பொறியியலாளர் தலைமை பொறுப்பை ஏற்று இருந்தார்.
 
===இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம்===
 
ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் வலதுபுறமாக இருக்கும் கோபுரம்) ஜப்பானிய கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் ஏற்றுக் கொண்டது.
 
கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் இடதுபுறமாக இருக்கும் கோபுரம்) தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான சாம்சுங் இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் உறுதிக்கலவை வலிமைச் சோதனையில் ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
===கட்டுமானப் பணிகள் தற்காலிக நிறுத்தம்===
 
கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அதுவரையில், கோபுரங்களில் நிர்மாணிக்கப்பட்டு இருந்த எல்லாப் பகுதிகளிலும் சோதனைகள் செய்யப்பட்டன. ஒரே ஒரு மாடியில், ஒரே ஒரு பகுதி மட்டும் பலகீனமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் பகுதி
தகர்க்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு 700,000 அமெரிக்க டாலர்கள் நட்டம் ஏற்பட்டது.
 
அதனால், உறுதிக்கலவைகளைத் தயாரிக்க, அங்கேயே மூன்று தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. இதில் ஏதாவது ஒரு தொழிற்சாலை தவறான உறுதிக்கலவையைத் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், தயார்நிலையில் இருக்கும் மற்ற இரு தொழிற்சாலைகளில் ஒன்று உடனடியாக மாற்றுத் தயாரிப்பில் இறங்கும். இது செலவுகளைக் குறைக்கும் அவசரத் திட்டங்களில் ஒன்றாகும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது