சேனாவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்'''. சேனை அரையர் என்னும் சொற்கள் புணரும்போது சேனாவரையர் என வரும். <ref>ஒப்புநோக்குக. பனை + அட்டு = பனாட்டு (தொல்காப்பியம் 1-284)</ref>. எனவே இவரது பெயர் சேனைத் தலைவரைக் குறிக்கும்.
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்''' (13 ஆம் நூற்றாண்டு). இவர் இந் நூலின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
 
13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வரும் சில தொடர்கள் இவரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் கருத்து. <ref>ஆற்றூர் சேனாவரையன்</ref> <ref>மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு பராந்தகநல்லூர்ப் புதுக்குடியினரான சேனாவரையர்</ref> <ref>பராந்தகநல்லூர்ச் சேனாவரையர்</ref> கல்வெட்டுகளிலிருந்து இவரது ஊர் [[மிழலை]] எனத் தெரிகிறது.
 
[[நன்னூல்|நன்னூலை]] <ref>13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய நூல்</ref> இவர் மேற்கோள் காட்டுவதால் இவரது காலம் அதற்குப் பிந்தியது. இவரது ஊருக்கு நிவந்தம் அளித்தவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன். <ref>1268-1311</ref> எனவே இவனால் போற்றப்பட்ட சேனாவரையர் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
 
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்''' (13 ஆம் நூற்றாண்டு). இவர் இந் நூலின்தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உரை எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1938 ஆம் ஆண்டில் பதிப்பித்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
: ''தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குப் பல உரைகளுளவாயினும், அவ்வுரைகளுள்ளே பொருள்களைத் தருக்கமுறையாகத் தெரித்துணர்த்துவதினானும், தெளிவும் இன்பமும் பயக்கும் வாக்கிய நடையுடைமையானும், ஆசிரியர் சூத்திரப் போக்கினையும் வடமொழி தென்மொழி என்னும் இரு வழக்கினையும் நன்குணர்ந்து தென்மொழி வழக்கொடு மாறுபடாவண்ணம் வடமொழி வழக்கினையுங்கொண்டு பொருளுரைத்தலினானும் தலைசிறந்து விழங்குவது சேனாவரையருரையே''
 
 
பிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல நயங்கள் உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது.
 
==உசாத்துணைகள்==
* கணேசையர், சி., ''தொல்காப்பியம் சொல்லதிகார மூலமும் சேனாவரையருரையும்'', திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1938.
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சேனாவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது