பி. ஜி. வுட்ஹவுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Started translating from English article (http://en.wikipedia.org/wiki/P._G._Wodehouse)
 
சி Translating the original English article (http://en.wikipedia.org/wiki/P._G._Wodehouse)
வரிசை 1:
'''சர் பெல்ஹம் கிரென்வில் வுட்ஹவுஸ்''' (15 அக்டோபர் 1881 - 14 பிப்ரவரி 1975) ஓர் ஆங்கில நகைச்சுவை எழுத்தாளர். அவருடைய எழுத்துகளில் நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், பாடல்கள் மற்றும் பல கட்டுரைகளும் அடங்கும். எழுபது ஆண்டு காலம் வெற்றிகரமாக தொடர்ந்து எழுதியவர். அவர் எழுத்துகள் இன்றும் பரவலாக வாசிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் பல தடுமாற்றங்களைத் தன் வாழ்வில் சந்தித்தாலும் - ஃபிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் அவர் மிகுதியான வாழ்க்கையைக் கழித்தார் - வுட்வுஸின் முக்கிய எழுத்துக்களம், அவருடைய பிறப்பு, படிப்பு மற்றும் இளமையான எழுத்து வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில், முதலாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் இருந்த ஆங்கில மேல்தட்டு மக்கள் வாழ்க்கையைச் சார்ந்ததாக இருந்தது.
 
ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில உரைநடை விற்பன்னரான வுட்ஹவுஸ், அவருடைய சமகாலத்தவர்களான ஹிலாய்ரெ பெல்லாக், எவெலைன் வாக் மற்றும் ருட்யார்ட் கிப்லிங் அவர்களைடையேயும், சமீப எழுத்தாளர்களான ஸ்டீபன் ஃபிரை, டக்லஸ் ஆடம்ஸ், ஜெ.கெ.ரௌலிங் மற்றும் ஜான் லெ கர்ரே போன்றோரிடையேயும் நன்மதிப்பு பெற்றவர்.
 
இன்று ஜீவ்ஸ் மற்றும் பிலான்டிங் காஸ்ட்ல் நாவல்கள் மற்றும் சிறுகதைகளினால் அறியப்படுபவர். வுட்ஹவுஸ் ஒரு நாடககர்த்தாவும், பாடலாசிரியரும் ஆவார். அவர் பதினைந்து மேடை நாடகங்கள் பகுதி எழுத்தாளர் ஆவார். முப்பது இசை-நகைச்சுவை நாடகங்களில், இருநூற்றைம்பது பாடல்களில் பங்குகொண்டிருக்கிறார். இவை பெரும்பாலும் ஜெரோம் கெர்ன் மற்றும் கய் போல்டன் தயாரித்த நாடங்களாகும். அவர் கோல் போர்ட்டருடன் ''எனிதிங் கோஸ்''(1934) என்ற இசை நாடகத்தில் பணிபுரிந்திருக்கிறார். கெர்ன்ஸ் இசையில் புகழ்பெற்ற ''ஷோ போட்'' இசை நாடகத்தில் வரும் ''பில்'' பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். கெர்ஷ்வின் - ராம்பர்க் அவர்களின் நாடகமான ''ரோசலி''யில்(1928), சிக்மன்ட் ராம்பர்க் இசைக்கு வரிகள் புனைந்திருக்கிறார். ருடால்ஃப் ஃப்ரிம்லுடன் அவருடைய இசைநாடகமான ''தி த்ரீ மஸ்கெட்டியர்ஸி''ல்(1928) பணிபுரிந்திருக்கிறார். அவர் சாங்ரைட்டர்களின் காட்சியகத்தில் இடம் வகிக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜி._வுட்ஹவுஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது