இந்திய மாநில ஆளுநர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மதராஸ் இராஜதானி என்ற பெயரில் 1653ல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டது. மலபார் பிராந்தியமான வடகேரளம், கடற்கரைப் பிராந்தியம் மற்றும் ராயலசீமா பிராந்தியமான ஆந்திரப் பிரதேசம் மற்றும் பெல்லாரி, தக்சின கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பிமாவட்டம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது. 1909லிருந்து மதராஸ் இராஜதானி செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் ([[புனிதஜார்ஜ் கோட்டை]]) தலைமையகமாகக் கொண்டு, மதராஸ் மாநிலம் என பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாகச் செயல்பட்டு வந்தது. 1947இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], மற்றும் [[கேரளம்]] ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
 
== தமிழ்நாடு ==
மதராஸ் மாநிலம் ஜனவரி 14,1969, அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகார வரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== தமிழக ஆளுநர்களின் பட்டியல் (சென்னை மாகாணம்)==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_மாநில_ஆளுநர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது