சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 35:
== நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு ==
 
1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி [[நெருக்கடி நிலை (இந்தியா)|தேசிய நெருக்கடி நிலையைப்]] பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயப் பிரகாஷ் நாராயண் மற்றும் [[ஆச்சார்ய கிருபளானி|ஜீவத்ராம் கிருபளானி]] போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.
 
நெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், "காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை [[இந்திரா காந்தி]], நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.<ref>மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4</ref>
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது