"சோம பானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,228 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி [[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்புகள் காணப்படுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------
 
'''சோம பானம் செய்முறை''' :- ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழமையும், மற்ற அத்தியாயங்களில்
நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த
மலைகளில் வளரும் சோமக்கொடியிலிருந்து பறித்த இலைகளை இடித்து தூளாக்கப்பட்டு சல்லடையில்கம்பளித்துணியில் வடிகட்டி தேன், பால் அல்லது தயிருடன் கலந்து மரப்பாத்திரங்களிலும், கலசங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு
வடிகட்டி தேன் அல்லது தயிருடன் கலந்து பக்குவமாக தயாரிக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு
வகை பானம். நாங்கள் சோம பானம் அருந்தி அமரர் ஆனோம் என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்
பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் [சோமன்] இணைத்து சொல்லப்
படுகிறது. சோமக் கொடி சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக கொடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமக்கொடி போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
-----------------------------------------------------------------------------------------------
'''சோம பானத்தின் சிறப்புகள்''' :- சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். வேதகால மக்கள் சோமபானத்தை தேவர்களுக்கு படைத்த் பின்பு தான் தாம் பருகுவர். வேதகால மக்கள் தமது தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்று. சோம யாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோம பானம் அருந்துவர். போரின்
போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட
உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. திபேத் நாட்டில் இன்றும் கூட சோமக்கொடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் பகுதிகளில் வாழும் பட்டாணியர்கள் சோமக்கொடி தாவரத்தை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
'''முனிவர்கள் போற்றிய சோமபானம்''':- ரிக்வேத கால முனிவர்கள் பலவாறு சிறப்பித்து மந்திரங்கள்
இயற்றியுள்ளனர்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1417077" இருந்து மீள்விக்கப்பட்டது