இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பயனரால் இராசிவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம், [[இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலைய...
*விரிவாக்கம்*
வரிசை 72:
'''இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Rajiv Gandhi International Airport'',{{airport codes|HYD|VOHS}}) அல்லது '''ஐதராபாத்து பன்னாட்டு வானூர்தி நிலையம்''', [[இந்தியா]]வின் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தின்]] நகர்மையத்திலிருந்து தெற்கே {{convert|22|km|mi|abbr=on}} தொலைவில் [[சம்சாபாத்து|சம்சாபாத்தில்]] அமைந்துள்ள பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும். இது முன்னாள் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ராஜீவ் காந்தி]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னதாக ஐதராபாத்தின் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருந்த [[பேகம்பேட் வானூர்தி நிலையம்|பேகம்பேட் வானூர்தி நிலையத்திற்கு]] மாற்றாக இது திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. தனியார் துறையும் அரசுத்துறையும் கூட்டாக கட்டமைக்கத் தொடங்கிய இந்திய வானூர்தி நிலையங்களில் இது இரண்டாவது முயற்சியாகும். முன்னதாக [[கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இவ்வாறான கூட்டு முயற்சியில் உருவானது. மார்ச்சு 23, 2008இல் இது வணிக செயலாக்கத்திற்கு திறந்து விடப்பட்டது. ஐதராபாத் நகரத்தை இந்தப் பன்னாட்டு விமானநிலையத்துடன் இணைக்க 11.6கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் உள்ள [[ஐதராபாத் உயர்வு விரைவுப்பாதைகள்|பி.வி. நரசிம்மராவ் உயர் விரைவுப்பாதை]] அக்டோபர் 19,2009 அன்று திறக்கப்பட்டது. <ref>[http://www.india-server.com/news/indias-longest-flyover-pvnr-expressway-14138.html India’s Longest Flyover PVNR Expressway Inaugurated In Hyderabad]</ref> இதன்பின்னர் 30 கிமீ தொலைவில் சம்சதாபாத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தை அடைய 45 நிமிடங்களே எடுக்கின்றது.
 
2010–11 நிதியாண்டில் இது இந்தியாவின் ஆறாவது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.<ref>{{cite web|url=http://www.aai.aero/traffic_news/dec2k10annex3.pdf |title=AAI traffic figures 2009–2011 |format=PDF |accessdate=16 May 2012}}</ref>
 
உலகின் சிறந்த வானூர்தி நிலையங்களை மதிப்பிடும் ஐக்கிய இராச்சியத்தின் இசுக்கைட்டிராக்சு நிறுவனம் இந்திய வானூர்தி நிலையங்களில் முன்னணி நிலையங்களில் ஒன்றாக இதனை மதிப்பிட்டுள்ளது.<ref>http://www.worldairportawards.com/Awards_2013/top100.htm</ref> இந்த நிலையத்தை தங்கள் போக்குவரத்து மையமாக [[ஸ்பைஸ் ஜெட்]], லுஃப்தான்சா கார்கோ மற்றும் புளூடார்ட் ஏவியேசன் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மேலும் [[ஏர் இந்தியா]], [[ஜெட் ஏர்வேஸ்]], ஜெட்லைட் நிறுவனங்கள் இங்கிருந்து பல பறப்புகளை மேற்கொள்கின்றன.
 
==மேற்சான்றுகள்==