தீண்டாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
'''தீண்டாமை''' ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், [[ஆதிவாசி]]கள், [[குற்றவாளி]]கள், [[ஓரின சேர்கையாளர்]]கள், [[திருநங்கை]]கள், கழிவகற்றும் தொழி செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது.
 
தீண்டாமை பரவலாக [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[பாகிஸ்தான்]] போன்ற நாடுகளில் [[தலித்]] மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த்யஇந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.<ref>[http://news.nationalgeographic.com/news/2003/06/0602_030602_untouchables.html India's "Untouchables" Face Violence, Discrimination.] Hillary Mayell
 
== தமிழ்நாட்டின் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் ==
# பொதுப்பதையில் நடக்க முடியாமை.
# செருப்பு, போட்டு நடக்க முடியாமை.
# சைக்கிளில் செல்ல முடியாமை.
# தோளில் துண்டு போட முடியாமை.
# வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை.
# பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை.
# தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை
# முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை.
# துணிகள் இஸ்திரி செய்து கொடுக்காமை.
# துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை.
# சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
# சலூன்களில் முடிவெட்ட முடியாமை.
# சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
# தேநீர் கடைகளில் இரட்டை குவளை.
# உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
# சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்
# தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை
# தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது
# தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது
# தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது
# பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை
# சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
# திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
# கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு.
# குளங்களில் குளிக்க முடியாமை.
# சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை
# ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு
# திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது
# ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது
# ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது
# ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட)
# பொது மயான உரிமை இல்லை.
# பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு.
# தலித்துகளுக்கு எனத் தனி மயானம்.
# தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
# கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
# தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
# தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.
# பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
# கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
# சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
# சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது.
# கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
# கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
# செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது.
# மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது.
# பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
# பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
# மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
# ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
# திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
# தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
# வசித படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
# கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
# பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
# மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது.
# பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
# வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
# தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
# சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
# தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
# கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
# அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
# அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
# கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
# தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.
# பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
# பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர்.
# தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
# தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
# கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.
 
 
<ref>[http://news.nationalgeographic.com/news/2003/06/0602_030602_untouchables.html India's "Untouchables" Face Violence, Discrimination.] Hillary Mayell
for [[National Geographic]] News. June 2, 2003</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தீண்டாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது