துரோணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎துரோணரின் சபதம்: *திருத்தம்*
வரிசை 4:
பரத்துவாசர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது '''க்ருடசி''' என்ற கந்தர்வ கண்ணியை கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார்,அந்த கந்தர்வ கண்ணியை கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார்.பானையில் இருந்து பிறந்தார் துரோணர்.
 
===துரோணரின் சபதம்===
துரோணர் பரம ஏழை அவர் வீட்டில் ஒரு பசு மாடுகூட இல்லை,பாலையே ருசி பார்க்காமல் வளர்ந்தார் மகன் அசுவத்தாமன். கஞ்சிக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் வளர்ந்தார் அசுவத்தாமன்,துரோணரின் இளமைக் கால நண்பர் பாஞ்சால நாட்டு அரசர் துருபதனிடம் போய் ஒரு பசுவை வாங்கி வருமாறு கிருபி துரோணரை நச்சரித்தாள்.சிறுவயதில் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வதாக அவன் சொல்லியிருக்கிறான்.எனக் கூறி துருபதனிடம் சென்று தனது சிறு வயது வாக்குறுதியை நினைவூட்டினார்.துருபதன் வாய்விட்டுச் சிரித்தான்,சமமானவர்களுடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியும். நான் செல்வம் மிகுந்த மன்னன் நீயோ ஏழை முனிவன் நாம் நண்பர்களாக இருக்க முடியாது,நட்பின் அடிப்படையில் பசுவைக் கேட்காதே. தர்மமாக கேள் பசுவை தானமாக தருகிறேன் என்றார் துருபதன்.இதைக் கேட்டதும் துரோணர் வருத்தமும், கோபமும் கொண்டார்,ஒரு நாள் உனக்கு இணையாக மன்னனாகி மீண்டும் வருவேன் என்று சபதம் செய்து பாஞ்சாலத்தை விட்டு
வெளியேறினர்
 
==ஆசானார்==
போர் வித்தையில் தேர்ந்த ஆசிரியரான பரசுராமனிடம் போய் போர்த் தந்தரங்களைக் கற்றார்.என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டுவிடாதே என எச்சரித்தார் பரசுராமர்.மாட்டேன் என வாக்குறுதி தந்தார் துரோணர்,ஆனால் பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே வாக்குறுதியை மறந்து அத்தினாபுரம் சென்று குரு வம்சத்திற்கு ஆசானாகி குரு வம்ச சத்திரிய இளைஞர்களை துருபதனுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/துரோணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது