எபிரேயருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 20:
== எபிரேயர் திருமுகத்தின் உள்ளடக்கம் ==
 
[[இயேசு கிறித்து|கிறிஸ்துவின்]] மேன்மையே இந்நூலின் மையக் கருத்தாகும். முன்னுரையில் [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] முழுமையான, முடிவான வெளிப்பாட்டைத் தருகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. இறைவாக்கினருக்கும் வானதூதருக்கும் பழைய [[உடன்படிக்கை (விவிலியம்)|உடன்படிக்கையின்]] இணைப்பாளரான மோசேக்கும் மேலானவராகக் [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] காட்டப்படுகிறார். கிறிஸ்துவின் குருத்துவம் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டுக்]] குருத்துவத்தினின்று முற்றிலும் மாறுபட்டதும் அதற்கு மேம்பட்டதுமாகும் எனச் சுட்டிக் காட்டப்படுகிறது. ஏனெனில் [[இயேசு கிறித்து|கிறிஸ்துவின்]] குருத்துவம் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை நிறைவு செய்கிறது (எபி 8:1-13); கிறிஸ்துவின் பலியும் எக்காலத்துக்கும் உரிய ஒரே பலியாய் விளங்கி, பழைய ஏற்பாட்டுப் பலிகளை நிறைவு செய்கிறது; [[இயேசுவின் சாவு|கிறிஸ்துவின் சாவு]], [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்பெற்றெழுதல்]], [[இயேசுவின் விண்ணேற்றம்|விண்ணேற்றம்]] ஆகியன விண்ணகத் தூயகத்தை நமக்குத் திறந்து வைத்துள்ளன என்னும் கருத்துக்கள் வலியுறுத்தப்படுகின்றன.
 
இத்தகைய காரணங்களினால், [[இயேசு கிறித்து|கிறிஸ்துவின்]] மீது நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவை விட்டு மீண்டும் யூத முறைக்குத் திரும்பலாகாது என்று கேட்டுக் கொள்கிறார் ஆசிரியர்; அவ்வாறு செய்தால் பாலைவனத்தில் கிளர்ச்சி செய்த இஸ்ரயேலர் போல் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/எபிரேயருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது