அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 93:
 
==புலவரின் செய்யுள் நூல்கள்==
குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், [[பதிகம் (சிற்றிலக்கியம்|பதிகம்]], ஊஞ்சல், [[சிந்து (சிற்றிலக்கியம்)|சிந்து]], [[இரட்டைமணிமாலை]], அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.
===பதிகங்கள்===
*வதுளை கதிரேசன் பதிகம் (1884)
*வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)
*[[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்|மாவைப்]] பதிகம் (1892)
*துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)
*அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897)
===ஊஞ்சல்கள்===
புலவரவர்கள் தொடக்ககாலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, [[இரட்டைமணிமாலை]], அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.
*வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
புலவரவர்கள் எழுதிய '''பதிகங்கள்''' ஐந்தாகும்,
*துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)
*கீரிமலை [[நகுலேஸ்வரம்|நகுலேசர்]] ஊஞ்சல் (1896)
*ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
*கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
*கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
*விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
*தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
*பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
*[[அராலி முத்துமாரியம்மன் கோயில்|அராலி முத்துமாரியம்மான்]] ஊஞ்சல் (1921)
 
===வேறு சிற்றிலக்கிய நூல்கள்===
அவை
*வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
*மாவையிரட்டை மணிமாலை (1896)
'''(1) வதுளை கதிரேசன் பதிகம் (1884)'''
*நகுலேசர் சதகம் (தசகம்) (1896)
*அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)
 
===கும்மி===
'''(2)வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)'''
*மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)
 
'''(3) [[மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்|மாவைப்]] பதிகம் (1892)'''
 
'''(4) துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)'''
 
'''(5)அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897)'''
என்பன ஆகும்.
 
பதிகம் என்பது கடவுளையும் கடவுள் எழுந்தருளியிருக்கும் கோவில் மற்றும் கோவிலின் அமைவிடம் முதலியவற்றின் சிறப்புப் பெருமைகளை உரைக்கும் பத்து அல்லது பதினோரு பாடல்களைக் கொண்ட பழமையான தமிழ் செய்யுள் நூல் வகையாகும்.புலவரின் பதிகங்களில் உள்ள ஆசிரியபாக்கள் எல்லாம் ஒழுகிய ஓசையும், விழுமிய பொருளும், [[சந்தம் (ஒலி)|சந்தம்]] பயக்கும் அனுபிரசரங்களும் மலிந்து படிப்போருள்ளத்தில் இன்பம் பயப்பன மட்டும் அல்லாது பதிகங்கள் எல்லாவற்றிலும் புராணகதைகள் செறிந்து உள்ளன. புராணங்கள் எவ்வாறு இறைவனின் திருவடிவம், நிறம் மற்றும் படைக்கலம் முதலியனவற்றைக் கூறுகிறதோ, அவ்வாறே புலவரும் தனது செய்யுளில் வருணிக்கின்றார். மாவைப்பதிகம் சொல்லழகும், பொருளழகும் ஒருங்கு வாய்க்கப்பெற்று விளங்குகிறது. அதிலிருந்து பாவொன்றை இங்கு தருதும்.
 
சீர்மேவு நவரத்ன கோலமிகு சிங்கார
செம்பொனின் மகுட முடியும்
திவ்விய குணங்களோ ராறுமாய் விறுற்ற
செய்யமுக மூவி ரண்டும்
ஏர்மேவு நீபமலர் மாலையொடு செச்சைமலர்
இனமாலை புரளு மார்பும்
எழின்மேவு மகமேரு கிரிபோல் நிலவுற்ற
இணையிலாப் புயமீ ராறும்
கார்மேவு கடலிலேழு மலரிபோல் மயிலில்வரு
கனகமய மேனி யோடு
கவின்மேவும் ஆண்டலைக் கொடியுவேற் படையுமாய்க்
காட்சிதந் தருள்புரி குவாய்
பார்மேவு பல்லுயிர்க் குயிராகி நிறைகின்ற
பாரமேசுர வடிவமே!
பாவலா! தேவர்தங் காவலா! மாவையம்
பதியில்வதி கந்த வேளே!
புலவர் தனது ஆழமான வடமொழி அறிவு புலப்படும் வகையில், முருக பெருமானை பாடிய [[அருணகிரிநாதர்]] பல திருப்புகழ்ப் பாக்களில் வடமொழிச் சொற்களை பயன்படுத்தியது போல் தாமும் மாவைப் பதிகத்தின் மூன்றாவது செய்யுளில் வடமொழி சொற்களை பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாவது செய்யுளில் உள்ள இவ்வடமொழி அடிகளை இங்கு காட்டுதும்
- - - - சரா சரா காரமே! யானசத் தியத்த
சச்சிதா நந்தமுதலே
தற்பரா சிற்பரா கற்பனா தீதனே ----
 
'''புலவர் இயற்றிய ஊஞ்சல்கள்'''
 
'''(1)வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)'''
'''(2)துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)'''
'''(3)கீரிமலை [[நகுலேஸ்வரம்|நகுலேசர்]] ஊஞ்சல்(1896)'''
'''(4) ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)'''
 
'''(5)கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)'''
'''(6)கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல்(1905)'''
'''(7)விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல்(1912)'''
 
'''(8)தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல்(1915)'''
'''(9)பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல்(1916)'''
'''(10)[[அராலி முத்துமாரியம்மன் கோயில்|அராலி முத்துமாரியம்மான்]] ஊஞ்சல்(1921)'''
என்பன ஆகும். ஊஞ்சல்கள் எல்லாம் செவ்விய இசையுடன் கற்போருக்கு இன்பம் பயக்கும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளன. கீரிமலை நகுலேசர் ஊஞ்சலில் இருந்து காப்புச் செய்யுளை கீழே காட்டுதும்.
சீர்கொண்ட யாழ்பாண தேசந் தன்னிற்
சிறப்பமருங் கீரிமலைச் சாரல் வாய்த்து
நீர்கூண்டல் சாகரசங் கமமே யான
நின்மலப்புண் ணியதீர்த்தக் கரையின் மேவும்
பேர்கொண்ட நகுலேசப் பெருமான் மீது
பெட்புறுசெந் தமிழ்கவிதை ஊஞ்சல் பாடக்
கார்கொண்ட யானைமுகம் உடைய முன்னேன்
கமலமலர் அடியிணைகள் காப்ப தாமே.
 
'''புலவர் இயற்றிய அட்டகம்'''
 
'''(1)அத்தியடி விநாயகர் அட்டகம்(1897)'''
ஆகும்
 
வழக்கமாக அட்டகங்களில் எட்டு ஒரேவகைச் செய்யுள்கள் காணப்படும். ஆனால் புலவரின் அட்டகத்தில் பத்துச் செய்யுள்களும் வெண்பா, விருத்தப்பா, கட்டளைக் கலித்துறை, அகவற்பா முதலிய பலவகை செய்யுள்களில் உள்ளன. இதில் பிள்ளையாரை நம்பித் தொழுபவருக்கு கிடைக்கும் நற்பயன்களை எடுத்துரைக்கும் செய்யுள் ஒன்றைக் கீழே ஈண்டு தருதும்
சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும்
பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி
அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப்
படிமேல் வணங்கு பவர்க்கு
 
'''புலவரின் சிறு செய்யுள் நூல்கள்'''
'''(1)வதுளைக் கதிரேசன் சிந்து(1884)'''
'''(2)மாவையிரட்டை மணிமாலை (1896)'''
 
'''(3) நகுலேசர் சதகம் (தசகம்)(1896)'''
 
என்பன ஆகும்.
சிந்து என்பது ஒரெதுகை உள்ள இரண்டு அல்லது மூன்று அளவொத்த அடிகளை கொண்டு அமைக்கபட்ட இசையியல் பாவாகும். வதுளையில் எழுந்தருளியிருக்கும் முருகபெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இச்சிந்து புலவரால் இயற்றப்பட்டதாகும். இதிலிருந்து ஒரு பாடல் பின்வருமாறு.
 
ஆறெழுத் துடநீரும் அக்கமணி யுந்தா
அந்தநமன் எந்தன்முன் அணுகா வர ந்தா
மாறுபுரி தீவினைகள் மாறுவர ந்தா
வதுளையம் பதியினிதம் வாழ்குமர வேளே.
 
இரட்டைமணிமாலை என்பது இரு வகை பாக்களை அந்தாதி வடிவில் பிணைத்து புனையப்படும் அரிய தமிழ்ச் செய்யுள் வகையாகும். நாயன்மார்களில் மிகப் பழமையானவரான [[காரைக்கால் அம்மையார்]] புனைந்த திருவிரட்டைமணிமாலை இவ்வகையில் முதலில் இயற்றப்பட்டதாகும். மாவிட்டபுர முருகன் மீது புலவர் பாடிய மாவையிரட்டை மணிமாலையில் இருந்து ஒரு பாடலை கீழே காட்டுதும்.
நல்குரவு நீங்கும் நலிபிணியுந் தானீங்கும்
வெல்பகையும் நீங்கி விளிந்தோடும்- சொல்வளங்கொள்
தண்டலைசேர் மாவைத் தலத்தமருஞ் சண்முகனைக்
கண்டுதுதி செய்தக் கடை.
 
தசகம் என்பது முதலில் வெண்பாவினாலும் பின் பலவின பாக்களினாலும் பாடப்படும் பத்து பாக்களைக் கொண்ட செய்யுள் நூலாகும். புலவரவர்கள் கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் மீது பாடிய நகுலேசர் தசகத்தில், முதலிலும் முடிவிலும் வெண்பாவினாலும், இடையில் கட்டளைக் கலித்துறை,கட்டளை கலிப்பா மற்றும் விருத்தம் முதலிய செய்யுள்களை பயன்படுத்தி இயற்றியுள்ளார். இதிலிருந்து பா ஒன்றை கீழே காட்டுதும்.
அன்று நகுலமுனி ஆதியர்க்குச் செய்கருணை
இன்று மறப்பினருள் எங்ஙனோ - வந்ரோலின்
வாசா வுமைநேசா வாரிமலை கீரிமலை
வாசா நகுலேசா மற்று.
 
'''புலவர் இயற்றிய கும்மி'''
மிலேச்சமதவிகற்பகக் கும்மி(1888)
 
ஆகும்.
கோவில்களைப் பாடும் செய்யுள் வகைகளைத் தவிர ''கும்மி '' என்னும் செய்யுள் வகையும் புலவரவர்களால் பயன்படுத்தப்பட்டது. வெண்டளையான் அமைந்த ஒரேதுகையுடைய எழுசீர்க் கழிநெடிலடிகள் இரண்டு உள்ளவாறு செய்யுள் புனைவது கும்மி எனப்படும். சுன்னகாம் சங்கர பண்டிதர் இயற்றிய ''மிலேச்சமதவிகற்பம் '' என்னும் நூலை மிலேச்சமதவிகற்பகக் கும்மி என்று கும்மி வடிவில் புலவரால் நூற்று இருபத்து இரண்டு செய்யுள்களில் பாடப்பட்டது. இதில் யூதமதம், யேசுமதம், இசுலாம்மதம் ஆகிய மதங்களின் வரலாறைக் கூறி, அக்காலத்தில் இம்மதத்தவரின் பிறமத நிந்தனைகளையும் அடிப்படைவாத போக்கையும் கண்டித்து கூறுவதாக இக்கும்மி பாடபட்டுள்ளது. புலவரின் பாட்டனாராகிய முத்துகுமாரகவிராயர் இயற்றிய ஞானக் கும்மியும் ஒத்த கருத்தை வலியுறுத்தும் நூல் என்பது குறிப்பிடத்தக்கது. மிலேச்சமதவிகற்பகக் கும்மி பாடல் ஒன்றை கீழே தருதும்.
ஆக்கிய பின்னர் மதங்க ளிருநூறு
அவைகளு வொவ்வொன்று மற்றை மதத்தினர்
மோக்சம் பெறார்நர கேழுஞ் சென்று
முழ்ங்குத் தனித்தனி ஞானப் பெண்ணே
 
'''===மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்'''===
 
புலவரவர்கள் எல்லாவகை தமிழ் செய்யுள்களையும் கசடறப் பாடுவதில் சிறந்து விளங்கியதற்கு மேல் கூறிய செய்யுள்கள் சாட்சியாகும். மேலும் பல தனி நிலைச்செய்யுள்களையும் பிறர் நூல்களுக்கு பல சிறப்புப்பாயிரச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். மேல் கூறியது போல் வடமொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த புலவரவர்கள், [[கம்பர்]], [[புகழேந்தி]] மற்றும் [[அரசகேசரி]] முதலியோர் வடமொழிப் பிரபந்தங்களை தமிழில் செய்யுள் நூல்களாக வடிவமைத்தது போல் தாமும் திறம்படச் செய்துள்ளார். அவை பின்வருமாறு.
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது