அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கிமூலத்துக்கு மாற்றம்
வரிசை 123:
 
===மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்===
'''(1)*ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)'''
 
'''(2)*மேகதூதக் காரிகை (1896)'''
புலவரவர்கள் எல்லாவகை தமிழ் செய்யுள்களையும் கசடறப் பாடுவதில் சிறந்து விளங்கியதற்கு மேல் கூறிய செய்யுள்கள் சாட்சியாகும். மேலும் பல தனி நிலைச்செய்யுள்களையும் பிறர் நூல்களுக்கு பல சிறப்புப்பாயிரச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். மேல் கூறியது போல் வடமொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த புலவரவர்கள், [[கம்பர்]], [[புகழேந்தி]] மற்றும் [[அரசகேசரி]] முதலியோர் வடமொழிப் பிரபந்தங்களை தமிழில் செய்யுள் நூல்களாக வடிவமைத்தது போல் தாமும் திறம்படச் செய்துள்ளார். அவை பின்வருமாறு.
'''(3)*சாணக்கிய நீதிவெண்பா (1914)'''
'''(4)*இராமோதந்தம் (1921)'''
'''(1)ஏகவிருத்தபாரதம் முதலியன(1896)'''
 
'''(2)மேகதூதக் காரிகை(1896)'''
'''(3)சாணக்கிய நீதிவெண்பா(1914)'''
'''(4)இராமோதந்தம்(1921)'''
ஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம், இராவணன் சிவதோத்திரம், வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள் முதலியன வடமொழிச் சுலோகங்களை தமிழ் செய்யுள்கள் வடிவில் புலவர் மொழிபெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள பாரதம், இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களை புலவர், ஏகவிருத்த பாரத இராமாயண பாகவதம் என்ற பெயரில் மூன்று விருத்தபாகளில் சுருக்கிப் பாடியமை புலவரின் இருமொழிப் புலமையை நன்கு பறைசாற்றுகிறது. இதன் காப்புச் செய்யுள்ளைக் கீழே தருதும்.
பாரதஞ்சீ ராமகதை பாகவதக் காதை
ஆரியத் தொல்கவியோ ரன்றுரைத்தார் - நேரவல்
மூன்று மொழிபெயர்த்து மூன்று கவி யாலுரைக்க
யான் துதிப்பே னைங்கரனை யின்று.
 
இராவணன் வடமொழியில் பாடிய இராவணன் சிவதோத்திரதை, மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு புலவரவர்கள் மொழிபெயர்த்து பத்து விருத்தபாக்களில் தமிழில் பாடியுள்ளார். இதில் ஒன்றைக் கீழே காட்டுதும்.
கங்கை மாநதி சடையேனுங் காடாகமீ தசைந்து
தங்க வைத்திடுங் கடவுளே தகதகென றெரியும்
அங்கி நேத்திர சந்திரசேகர வடியேற்(கு)
இங்கு வேண்டுமாற் கணந்தொறு நினைநினைந்திருக்கை.
சில வடமொழிச் சுலோகங்களை தமிழில் மொழிபெயர்த்து, வெண்பா, கட்டளை கலிப்பா, விருத்தம் முதலிய செய்யுள் வகைகளில் புலவரவர்கள் முப்பத்தொரு பாக்களை வினோத சித்திர வினாவுத் தரக்கவிகள் என்ற பெயரின் கீழ் பாடியுள்ளார். இதில் வரும் செய்யுள் ஒன்றை கீழே தருதும்.
நாரணனார் மார்புரையும் நாயகியார் வன்மைதனக் (கு)
கோரெழுத்துப் பேரென்ன வோது தெய்வப்- பேரென்னை
புள்ளுணர்த்து நாமமென்ன பொல்லாத ராவணனாற்
கொள்ளப்பட்ட டாளெவளோ கூறு
உத்தரம் =சீதாதேவி
 
போசமன்னனின் அவையில் வடமொழிப் புலவனாய் திகழ்ந்த [[காளிதாசன்]] பல புதுமைச்சிறப்புகளுடன் இயற்றிய மேகசந்தேசம் ( தமிழில் முகில் விடு தூது ) என்னும் நூலின் நூற்றிருபதைந்து சுலோகங்களையும், தமிழில் புலவரவர்கள் நூற்றிநாற்பத்தைந்து கட்டளைக் கலித்துறைப்பாக்களாக மேகதூதகாரிகை என்ற பெயரில் பாடியுள்ளார். இதில் போசமன்னனதும் காளிதாசரினதும் வரலாற்றை கூறும் பொருட்டு போசப்பிரபந்தம் என்னும் நூலில் இருந்தும் சில சுலோகங்களை புலவர் மொழிபெயர்த்து செய்யுள்களாக மேகதூதகாரிகையின் முகவுரையில் சேர்த்துள்ளார். இவற்றுள் சில பின்வருமாறு.
 
மேகதூதகாரிகையின் காப்புச் செய்யுள் கீழ் வருமாறு.
திருமேவு போசன் சபையிற் கவிஞர் சிகாமணியாய்
வருமேக வீரன் கவிகாளி தாசன் வகுத்துரைத்த
ஒருமேக தூதந் தமிழ்க்கவி யாக்க வுதவியெலாந்
தருமேக தந்த விநாயகர் பாத சரோருகமே.
 
குரங்கு ஒன்று குளக்கரையில் நின்ற நாவல் மரக் கிளையில் தாவிச் சென்றபோது, கனிகள் சில குளத்தில் விழும்போது ''குளுகுக் குளுகுக்குளு'' என்று ஓசைஎழுப்பியத்தை கவனித்த போசராசன், காளிதாசரிடம் சென்று இதைச் சொல்ல, அவர் இந்நிகழ்வு முழுவதையும் ஒரு சுலோகத்தில் பாடினார். போசபிரபந்ததில் வரும் இச்சுலோகத்தை தமிழில் புலவரவர்கள் பின்வருமாறு பாடியுள்ளார்.
பக்குவமாய் முற்றிப் பழுத்துளநா வற்கனிதான்
அக்கொம்பர் மந்தி அசைத்திடப் - புக்கு
மெழுகுக் குறைபோல விழுந் தொனிதான்
குளுகுக் குளுகுக்குளு.
குபேரனின் சோலைக் காவலனான இயக்கன் ஒருவன் குபேரனின் சாபத்தால் இல்லாளை விட்டுப் பிரிந்து சித்திர கூட மலையில் வாழும் காலத்தே, பிரிவுத் துயரால் வாடும் அவன் கார்கால முகிலை மனையாளிடத்தே தூதுவிட துணிந்தபோது, தனது நிலைபற்றியும், மனைவி பற்றியும் முகிலிடத்தே உரைப்பதாக அகப்பொருளைத் தழுவி காளிதாசரினால் பாடப்பட்ட மேகசந்தேசத்தில் இருந்து, புலவரால் மொழிபெய்ர்க்கபட்ட செய்யுள் ஒன்றை கீழே காட்டுதும். இச்செய்யுள் முகிலிடத்தே தூது வேண்டுவதாக அமைந்துள்ளது.
சந்தாப வெந்தழல் உற்றார்க் கினிமை தருமுகிலே
மந்தார மேவும் பொழிலள கேசன் மனக்கொதிப்பால்
வந்தே னுரைக்கு முரையைப் பிரிந்த மனையவட்குச்
சந்தாகிச் சென்றங் குரைத்துத் துயரந் தணிக்குவையே.
வடநாட்டில் பேரரசனாக விளங்கிய [[சந்திரகுப்த மௌரியர்]] பேரரசு நிறுவ, வழிகாட்டியாகவும் முதல் அமைச்சராகவும் விளங்கிய [[சாணக்கியர்]], வடமொழியில் இயற்றிய சாணக்கிய சதகம் என்னும் அறநூலை தமிழில் நூறு வெண்பாக்களில் மொழிபெயர்த்து சாணக்கிய நீதிவெண்பா என்ற பெயரில் புலவர் வெளியிட்டார். எல்லாரும் இலகுவில் விளங்கிக்கொள்ளும் வகையில் அமைந்த வெண்பாக்களிருந்து ஒன்றைக் கீழே காட்டுதும். மக்களுக்கு எவை எல்லாம் அழகு தருவன என்பதை இச்செய்யுள் சொல்லும்.
தாங்குருவங் கெட்டார்க்குத் தக்ககல்வி யேயழகு
மாங்குயிலுக் கின்னிசையே மற்றழகு - தீங்ககன்று
ஞானமுனி வோர்க்கழகு நற்பொறையே நல்லுறுதி
யானகற்பே பெண்டிர்க் கழகு''
இராமோதந்தம் என்ற வடமொழி நூலை புலவரவர்கள் அதோ பெயரில் தமிழில் எல்லாரும் படித்து மகிழும் வண்ணம், நூற்றியிருபதெட்டு விருத்தப்பாக்களில் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவே புலவரின் கடைசி நூலாகும். இதனை மதுரை தமிழ் சங்கம் 1922ஆம் ஆண்டு வெளியிட்டது. இச்செய்யுள் நூலில் முடிவில் வரும் வாழிவிருத்தத்தில் புலவரவர்கள் தமது குறிக்கோளை ''வாழி செந்தமிழ் இலக்கிய விலக்கண வரம்பு'' என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஒரு செய்யுளை கீழே காட்டுதும்.
வெய்ய ராவணற் கொன்றிட விரைவினில் யாமும்
வையங் காத்திடுந் தசரதன் மைந்தனாய் வருவேம்
பொய்ய னாமவன் றன்னொடும் போர்புரி காலைத்
துய்ய வானவ ரெமக்கருந் துனைசெயும் பொருட்டு''
 
==புலவரின் வசன அல்லது உரைநடை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது