இனப்பாகுபாட்டுக் குற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
 
இவ்வாறாக, இனப்பாகுபாடு மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என ஏற்றுக்கொண்டபோது அதன் செயற்பாட்டு எல்லை தென்னாப்பிரிக்காவையும் தாண்டி விரிந்ததாக இருந்தது. பொதுவாக இனப்பாகுபாட்டுக் குற்றம் என்னும் தொடர் தென்னாப்பிரிக்காவுடன் தொடர்புடையதாக எண்ணப்பட்டபோதும், இத்தொடர் எந்த நாட்டிலும் இருக்கக்கூடிய இனப்பாகுபாட்டுக் கொள்கைகளைக் குறிக்கும்.
 
பின்னர் மேலும் எழுபத்தாறு நாடுகள் இந்த மரபொழுங்குக்கு ஆதரவாகக் கையொப்பம் இட்டன. ஆனாலும் பல நாடுகள் இதில் கையொப்பம் இடவோ அதனை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. [[கனடா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[இசுரேல்]], [[இத்தாலி]], [[நெதர்லாந்து]], [[ஐக்கிய இராச்சியம்]], [[ஐக்கிய அமெரிக்கா]] என்பவை கையொப்பம் இடாத நாடுகளுள் அடங்குவன. தாம் இதற்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் அளித்த ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதியான [[இளைய கிளரென்சு கிளைய்ட் பெர்கூசன்]], இந்த முறையில் இனப்பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றமாக்கப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மோசமானவை, அதனால் மிகக் கவனமாக அவை விவரிக்கப்படுவதுடன், ஏற்கெனவே இருக்கும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் பொருள் கொள்ளப்பட வேண்டியன என்றும் கூறினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இனப்பாகுபாட்டுக்_குற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது