29,254
தொகுப்புகள்
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி (*திருத்தம்*) |
|||
'''ஒலிம்பிக் விளையாட்டுக்கள்''' ('''Olympic Games''' அல்லது '''Olympics''') என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன.<ref name="EB">{{cite web | title= Overview of Olympic Games | author= | coauthors= | url=http://www.britannica.com/EBchecked/topic/428005/Olympic-Games | publisher=Encyclopædia Britannica | accessdate=4 June 2008
}}</ref> பண்டைய [[கிரீஸ்]] நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், Pierre de Coubertin|Pierre Frèdy, Baron de Coubertin என்ற [[பிரான்ஸ்]] நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு [[அனைத்துலக ஒலிம்பிக் குழு]]வை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் [[ஒலிம்பிக் பட்டயம்|ஒலிம்பிக் பட்டயத்தினால்]] வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு|ஒலிம்பிக் இயக்கத்தை]] நிர்வகித்து வருகிறது.
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான [[
ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. [[ஒலிம்பிக் கொடி]], தீப்பந்தம் போன்ற சின்னங்களும், [[தொடக்கவிழா]], [[நிறைவுவிழா]] போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
|