நுரையீரல் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:...
*திருத்தம்*
வரிசை 89:
[[File:Lung small cell carcinoma (1) by core needle biopsy.jpg|thumb|left|சிற்றணு நுரையீரல் தீவிரப் புற்றுநோய் (உள்ளக ஊசி உயிர்த்திசுப் பரிசோதனையின் நுண்ணோக்கித் தோற்றம்).]]
 
சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோயானது குறைவாகவே ஏற்படுகிறது. முன்பு இவ்வகை "ஓட் செல்" புற்றுநோய் என அழைக்கப்பட்டு வந்தது.<ref>[http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000122.htm Lung cancer - small cell] Medline Plus. Retrieved 5 February 2010.</ref> பெரும்பாலும் பெரிய காற்றுப் பாதைகளில்(முதன்மை மற்றும் இணை மூச்சுக் குழாய்) இவை உண்டாகி துரிதமாக வளர்ச்சி பெற்று பெரிய அளவில் வளர்ந்து விடுகின்றன.<ref name="Collins"></ref> இந்த சிறிய உயிரணுக்கள் அடர்த்தியான நரம்பு சுரப்பி மணியுருக்களை (இந்தக் கொப்புளங்களானது நாளமில்லா நரம்பிய உட்சுரப்பு [[வளரூக்கிஇயக்குநீர்|இயக்குநீரைக்]] கொண்டுள்ளன) கொண்டுள்ளன. இவை உட்சுரப்பு/புதுப்பெருக்கப் பக்கவிணை நோய்க்குறியீட்டையும் இக்கட்டிக்கு அளிக்கின்றன.<ref name="Rosti"></ref> தொடக்கத்தில் வேதிசிகிச்சை மற்றும் கதிரியக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியதாக இருந்தாலும், பெரும்பாலும் இந்த சிகிச்சைகளினால் உடலின் பல பகுதிகளுக்குப் பரவும் தன்மை கொண்டவையாக உள்ளன. சிறிய உயிரணு நுரையீரல் புற்றுநோய்கள் நீண்டகாலமாக அளவான மற்றும் பரவலான நோய் நிலை என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகையான நுரையீரல் புற்றுநோய்கள் புகைப்பழக்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளன.<ref name="Barbone"></ref>
{{clearleft}}
 
வரிசை 141:
ஒரு வேளை சுவாசப்பாதையில் புற்றுக்கட்டி வளர்ந்திருந்தால், அது சுவாச ஓட்டத்தைத் தடைப்படுத்தலாம். அது சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகிவிடும். அடைப்பு ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு பின்னால் சுரப்பு நீர் திரள்வதற்கு இது வழிவகுக்கலாம். நோயாளிக்கு [[நுரையீரல் அழற்சி|நுரையீரலழற்சி]] நோய்த்தாக்கநிலை ஏற்படலாம். பல நுரையீரல் புற்றுநோய்களுக்கு மிகச்சிறந்த இரத்த ஓட்டம் இருக்கும். புற்றுக்கட்டியை சுற்றிய பகுதிகள் வலுவற்றதாக இருக்கலாம். இது சுவாசப்பாதையினுள் புற்றுக்கட்டியில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட வழிவகுக்கக் கூடும். அதனைத்தொடர்ந்து அந்த இரத்தமானது இருமும்போது வாய்வழியாக வெளிவரலாம்.
 
புற்றுக்கட்டியின் வகையினைச் சார்ந்து, புதுப்பெருக்கப்பக்கவிணைக் கூறு என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தில் ஏற்படக்கூடும்.<ref name="Honnorat"></ref> நுரையீரல் புற்றுநோயில் இந்தக் குறிப்பிடத்தக்க நிகழ்வானது லாம்பர்ட்-ஈட்டன் தசைவலுக்குறை நோய்க்குறியீடு (Lambert-Eaton myasthenic syndrome) (தன் எதிர்பொருள் காரணமாக ஏற்படும் தசைப் பலவீனம்), கால்சியம் மிகைப்பு (hypercalcemia) அல்லது பொருத்தமற்ற சிறுநீர்க் குறைப்பி வளரூக்கிஇயக்குநீர் நோய்க்குறியீடு (syndrome of inappropriate antidiuretic hormone) (SIADH) உள்ளிட்டவற்றைக் கொண்டிருக்கலாம். பான்கோஸ்ட் புற்றுக்கட்டிகள் (Pancoast tumor) என்று அறியப்படும் நுரையீரலின் மேல்புறத்தில் (உச்சி) ஏற்பட்ட புற்றுக்கட்டிகள்<ref name="Jones"></ref>, பரிவு நரம்பு மண்டலத்தின் பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தக் கூடும். இதனால் வியர்க்கும் விதங்களில் மாற்றம் மற்றும் கண் தசைச் சிக்கல்கள் (ஹார்னரின் நோய்க்குறியீடு (Horner's syndrome) என்று அழைக்கப்படும் நோய்க்குறியீடின் சேர்க்கை) போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அத்துடன் புயவலையின் (brachial plexus) தாக்குதல் காரணமாக தசை வலுக்குறைவும் ஏற்படும்.
 
வயது குறைவானவர்களில் நுரையீரல் புற்றுநோயின் பெரும்பாலான அறிகுறிகள் (எலும்பு வலி, [[காய்ச்சல்|காய்ச்சல்]] மற்றும் எடை குறைதல்) குறிப்பிட இயலாதவையாக இருக்கின்றன. இது இருநோய் பாதிப்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஏற்படலாம்.<ref name="Cancer Medicine"></ref> பல நோயாளிகளுக்கு அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னர் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு முன்னரே புற்றுநோயானது தொடங்கிய பகுதியிலிருந்து முழுவதுமாக பரவியிருக்கும். மூளை, எலும்பு, [[அண்ணீரகச் சுரப்பி|அதிரனற்சுரப்பி]]கள், மாறுபக்க (எதிர்ப்புற) நுரையீரல், கல்லீரல், இதய வெளியுறை மற்றும் [[சிறுநீரகம்|சிறுநீரகங்கள்]] ஆகியவை புற்றுநோய் உடலில் பரவும் பொதுவான இடங்கள் ஆகும்.<ref name="ajcc"></ref> நுரையீரம் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சுமார் 10 சதவீதத்தினருக்கு நோயறிதலின் போது எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை. இந்த புற்றுக் கட்டிகள் தொடர் மார்புக் கதிர்வீச்சு ஒளிப்பட வரைவியில் உடனடியாகக் கண்டறியப்படுகின்றன.<ref name="Harrison"></ref>
வரிசை 152:
புகை பிடித்தல், குறிப்பாக சிகரெட்டுகள் புகைப்பது நுரையீரல் புற்று நோய்க்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கிறது.<ref name="AUTOREF5"></ref> சிகரெட்டானது ரேடான் சிதைவுத் தொடர்வரிசையில் இருந்து கதிரியக்க ஐசோடோப்பு, நைட்ரோசமைன் மற்றும் பென்சோபிரைன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட அறியப்பட்ட<ref name="Hecht"></ref> புற்று நோய்க் காரணிகளைக் கொண்டிருக்கிறது. மேலும் நிக்கோடினானது உடைந்த திசுக்களின் தீங்கு விளைவிக்கக் கூடிய வளர்ச்சிக்கான தடுப்பாற்றலைக் குறைக்கிறது.<ref name="AUTOREF6"></ref> உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத நுரையீரல் புற்றுநோய் மரணங்கள் புகைபிடித்தலின் காரணமாகவே ஏற்படுகின்றன.<ref name="Peto"></ref> அமெரிக்காவில் 87 சதவீத (இதில் 90% ஆண்கள் மற்றும் 85% பெண்கள்) புற்றுநோயாளிகளுக்கு நோயின் காரணமாக புகை பிடித்தல் இருக்கிறது.<ref name="Samet2"></ref> புகை பிடிக்கும் ஆண்களில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு 17.2% இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் இந்த இடர்பாடு 11.6% ஆகும். இந்த இடர்பாடானது புகை பிடிக்காதவர்களில் குறிப்பிடத்தக்களவில் குறைவாக இருக்கிறது. அது ஆண்களில் 1.3 சதவீதமாகவும் பெண்களில் 1.4 சதவீதமாகவும் இருக்கிறது.<ref name="Villeneuve"></ref>
 
புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட (கொண்டிருந்த மற்றும் தற்போதும் கொண்டிருக்கும்) பெண்கள் வளரூக்கிஇயக்குநீர் சிகிச்சை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயினால் இறக்கும் இடர்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. செல்பவுல்ஸ்கி (Chlebowski) மற்றும் ''பலரால்'' மேற்கொள்ளப்பட்டு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வளரூக்கிஇயக்குநீர் சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்களுக்கு, மருந்துப் போலி எடுத்துக் கொண்ட பெண்களைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகமான மரண இடர்பாடு இருப்பதாக வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஆச்சரியத்துக்கு இடமின்றி தற்போதும் புகைபிடித்து வருபவர்களுக்கு இடர்பாடு அதிகமாகவும், அதற்கடுத்த இடத்தில் புகைப்பழக்கத்தை விட்டவர்களும் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு மிகவும் குறைவாகவே இடர்பாடு இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களில் (பழக்கத்தை விட்டவர்கள் அல்லது தற்போதும் தொடர்பவர்கள்), மருந்துப்போலி எடுத்துக் கொண்டவர்களில் 2.3 சதவீதத்தினர் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர். இவர்களிடன் ஒப்பிடுகையில் வளரூக்கிஇயக்குநீர் சிகிச்சை மேற்கொண்டவர்களில் நுரையீரல் புற்றுநோயினால் 3.4 சதவீதத்தினர் இறக்கின்றனர்.<ref>{{cite journal |title=Non-small cell lung cancer and estrogen plus progestin use in postmenopausal women in the Women’s Health Initiative randomized clinical trial|author=Chlebowski RT et al|journal=Journal of Clinical Oncology|date=2009|volume=27|issue=155|page=CRA1500}}</ref>
 
ஒரு நபர் புகை பிடிக்கும் நேரம் (அத்துடன் எத்தனை தடவை புகைபிடிக்கிறார்) என்பது அந்த நபருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதில் காரணியாக இருக்கிறது. ஒரு நபர் புகை பிடிப்பதை நிறுத்தி விட்டால் சேதமடைந்த நுரையீரல் படிப்படியாக சரியாவதன் காரணமாக இந்த இடர்பாடு படிப்படியாகக் குறைகிறது. மேலும் மாசுபட்ட துகள்கள் படிப்படியாக நீக்கப்படுகின்றன.<ref name="USDHHS1990"></ref> மேலும் புகைபிடிப்பவர்களைக் காட்டிலும் புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் புற்று நோயானது சிறப்பான நோய்க்குணமடையும் தன்மையைக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.<ref name="Nordquist"></ref> மேலும் சிகிச்சையின் போது புகைபிடிப்பதை நிறுத்திவிட்ட ஒரு நோயாளியைக் காட்டிலும் அந்த சமயத்திலும் புகை பிடிக்கும் நோயாளிகள் குறைவான ஆயுளே கொண்டிருக்கின்றனர்.<ref name="Tammemagi"></ref>
"https://ta.wikipedia.org/wiki/நுரையீரல்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது