கம்பதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கம்பதாசன் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் மருங்கே உள்ள உலகாபுரம் என்ற கிராமத்தில்,(குலாலர்)குயவர் குலத்தில் சுப்பராயர் - பாலம்மாள் தம்பதிக்கு 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஒரே மகன். மற்றவர் ஐவரும் பெண்கள். இவரது இயற்பெயர் அப்பாவு. பெற்றோர் இவரை "இராஜப்பா" என்று செல்லமாக அழைத்தார்கள். கம்பன் மீது அதிக பற்றுக் கொண்டவர் என்பதால் கம்பதாசன் என்ற புனைப் பெயரை வைத்துக் கொண்டார்.
 
ஆறாம் வகுப்பு வரைதான் தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார். கவிஞரின் குடும்பத்தினர் அவரது இளமைப் பருவத்திலேயே சென்னையைச் சேர்ந்த புரசவாக்கம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்குள்ள குயப்பேட்டை நகர சபைப் பள்ளிக் கூட்டத்திலேயே தமது படிப்பைத் தொடர்ந்துள்ளார். நடிப்புக் கலையிலே நாட்டம் ஏற்பட்டதால், ஆரம்பப் பள்ளிக்கு மேல் இவர் நாட்டம் கொள்ளவில்லை. நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகங்களுக்குப் பாட்டெழுதினார். கம்பதாசனுக்கு நல்ல குரல் வளம் இருந்தது. நாடகங்களில் பாடுவார். பாடகராகவும் புகழ் பெற்றார். ஆர்மோனியமும் வாசிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/கம்பதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது